யுகங்கள் வரக்கூடும்
அந்திமக் காலையில் உறங்குகின்ற என்னுள் கண்விழிக்கிறது உன்னுடன் நிகழ்கின்ற கூடலான கனவு நினைவு தளிர்க்கையில் கணக்கின்ற நெஞ்சம் கீழ்காலம் நோக்கி இழுக்கிறது புதைந்த நம் நினைவை அங்கே இடிபாடுகளில் பூத்து கொழித்துக் புதையாது கிடக்கிறது நாம் பரிமாறிய பிரியங்கள் காலம் பொய்ப்பதும் காதல் இனிப்பதும் செய்கின்ற இரவுக் கனவுகளை வாழ்தலாக மாற்றும் விஞ்ஞானம் வசப்படின் நீயும் நானும் சர்ப்பங்களாய்ப் பின்னிப்பிணைய காதல் பூத்திருக்கும் காலம் காத்திருக்கும் யுகங்கள் வரக்கூடும்.