உன்னவனின் அறை

கடித்து தடித்த காவி ரொட்டி! என்றோ குடித்து இன்றும் கழுவா காபிக்கோப்பை! அசைந்துகொண்டேயிருக்கும் அரைக்குடுவை அருந்தும் நீர்! கொஞ்சம் படித்துக் கவிழ்த்துப்போட்ட கலைஇலக்கியம்! கனவுகளில் கலைந்து எங்கும் சிதறிக்கிடக்கும் உன் நினைவுகளென வாழ்வின் சாட்சியாய் நிரம்பிக் கிடக்கிறது காலைக்கதிரின் கால்கள் பதிந்த உன்னவனின் அறை!