Posts

Showing posts from March, 2019

மகளிர் தினம்

Image
பெரும் பிரியத்தின் சுவடாய் விரிகிற கனவின் சாரம் நீ! கனலாய் பொசுக்கும் காமத்தின் வடிகால் நீ! பரந்துபட்டு சலிக்கின்ற இப்பெருவாழ்வின் ஒரே ஆறுதல் நீ! கானல்நீராய் விரிந்து பொய்க்கின்ற நிதர்சனத்தின் விளிம்பு நீ! தடம் மாறி பயணிக்கையிலெல்லாம் வழி மாற்றும் வாழ்வியல் நீ! நானாயிருக்கும் என்னை நாமாய் மாற்றும் தத்துவம் நீ!! இவ்வுலகத்தை இயக்கும் பெருஞ்சக்தியாம் அனைத்து பெண்மைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!