Posts

Showing posts from September, 2022

பிரியத்தின் ராட்சசி

அழுத்தத்தில் மனம் ஆர்ப்பரித்து அழுகையில் நீ அசரீரீயாக வருகிறாய்!  கனத்த இதயத்தை நொடிப் பொழுதுதில் இலுவாக்கும் விந்தை தெரிந்தவள் நீ!  உன் சிரிப்பு  துயரத்தின் அழுக்குகளை துடைத்தெறிந்து  இன்ப அகலினை இழகுவாக  ஏற்றுகிறது!  என் இறப்புக்கு முந்தைய  இறுதிப்பார்வையில் நான் காணவிரும்புகிற முகம் உன்னது பற்ற விரும்புகிற கரங்களும் உன்னது என்னை நிதம் தின்று செரிக்கும் நீ என் பிரியத்தின் ராட்சசி!.

ஆல்பா

ஆல்பா : நாய்க்குட்டிகளை உனக்கு பிடிக்குமென்பது  எனக்குத் தெரியும் எனக்கு உன்னைப் பிடிப்பது மாதிரி!  உன் வீடு வந்த  அந்த நாட்களிலிருந்து அறிவேன் டைகர் இறந்தபோது நீ அழுதது இன்னும் ஈரமாக நினைவிருக்கிறது  ஆழத்தில் அழுத்தமாக!  இப்போது  ஆல்பா வந்திருக்கிறான் அதிர்ஷ்டசாலி!  விழிகள் விரிய குழந்தையின் கூதுகலத்தோடு நீ அவனை  விவரித்தப் பொழுதுகளில் புதிதாய்  புரிந்து கொண்டேன் உன்னை!  உன் காலடியிலேயே  உன்னை நாவால் நக்கிக் கொண்டே அவன் திரிவதாய் நீ விளிக்கையில் நான் விழிகள் சுருங்கி விடியும்வரைக் கடுப்பானதை நீ உணர்ந்திருக்கக் வாய்ப்பில்லை போகட்டும்!  நாய்க்குட்டிகளைக் குறித்த செய்திகளை  இப்போதெல்லாம் படிக்கிறேன் பகிர்கிறேன் உன்னோடு!  அரைவேக்காடு வாட்ச் மேனோடு அரைமணி நேரம் நாயுலகம் குறித்து  என்னை விவாதிக்க வைத்த பாவமெல்லாமும் உனக்கே!  ஆல்பா குறித்து சிறுகதை வேறு எழுத வேண்டும்!  இந்நாட்களில் உன்னைக் காதலிப்பது  கரெக்ட் செய்வது பெரும்பாடாயிருக்கிறது! Hehe😀