Posts

Showing posts from June, 2023

I LOVE YOU!

Image
நீ சொல்லிய  அரிதினும் அரிதான  "I  love  you" க்களை  ஒரு பொக்கிஷம் போல  வைத்திருக்கிறேன்  நான் பால்யம்  கடத்திய  கிராமத்தின் வீதிகளிலும்  என்  நியாபகத்தில்  புதைந்து கிடைக்கும்  ஆரம்ப பள்ளியின்  வாசலிலும்  எனது  அம்மா வீட்டில்  இன்றும் நிற்கும்  பனைமரத்தின்  அடியிலும்  சாந்தா  அக்காவை  நினைத்துக் கொண்டு  அவர்கள்  வீட்டு கல்திண்ணையிலும்  நான் உன்னோடு  தீபாவளி வாழ்த்துக்களை  பரிமாறிய  வெயிலடிக்கும்  மொட்டைமாடியிலும்  எனது கல்லூரி  அரசமர சைக்கிள்  கொட்டகையிலும்  போய் நின்று  உனது "I Love you" வை  நீ என்னிடத்தில் சொல்வதாக  மனதிற்குள் சொல்லி  மகிழ்ந்து கொள்வேன்  உன்னை என்னவளாக  கூட்டிப் போய்  காண்பிக்க நினைத்த  என் உயிர் உலாவும்  இடங்கள் இவை.