என்ன மர்மம்?!

பயணிகள் நிறைந்த பேருந்துப் பயணத்தில் தெளிந்த வட்டமாயிருந்த அழகுப்பெண்ணின் முகம்! கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு இருக்கையின்றி நின்று கொண்டும் தொங்கிக் கொண்டுமிருந்த சிலரின் பாவனைகள்! நாளை உலகம் அழியும்முன் நவீனமாய்த் தவழும் கைப்பேசியை அறிந்துகொள்ளும் அறநோக்கோடு அமர்ந்து வந்த சிலர்! அத்தனை விசித்திர மனிதரையும் அழகாய்த் தாங்கி பயணித்து தவிக்கவிட்டு இறக்கி பயணப்பட்ட குளிரூட்டப்பட்ட பேரூந்தென எல்லாம் நினைவுப் படுகையிலிருந்து எள்ளளவாய் மறந்து போனாலும் அசிங்கத்தை மிதித்துவிட்டு அவன் அள்ளிவந்த மணமட்டும் அம்மணமாய் இன்னும் அழியாது அலைவது என்ன மர்மம்?!