அவள்
பிரியங்களை தேக்கியே வைக்கிற அணைக்கட்டு நீ! விளை மனம் காய்ந்து ஓய்ந்து கருகிப் போனாலும்.. என்றாவது ஒருநாள் பெருமழை பெய்யும் பிரியம் பெருகும் அவ்வளவே.. ️ நின் நினைவு வரின் மோகம் நீயே வரின் மோகனம்.. நீ சந்திப்பதாக சொன்னவுடனே உன்னருகே வந்துவிட்டது மனது. உடல் அப்புறம் வரும். எல்லா கூட்டங்களிலும் தனித்திருப்பதும் தனுத்திருக்கையிலெல்லாம் களித்திருப்பதும் உன் நினைவால் தான்.. மழை எப்பொழுதும் வரட்டும் மண் வாசனையே மகிழ்வு தானே.. இரவில் தனித்து உறங்கும் குழந்தை அனிச்சையாக அன்னையினருகில் சேர்வது போல்தான் நம் பிரியம். நின் நினைவு சூழக் கழிகின்ற நிகழ்காலம் போலன்றி நீ சூழக் கழியட்டும் அந்திம காலம். உன்னோடு வாழ்கிற கனவுதான் எனக்கு நிஜம்.. நீயன்றி நின் நினைவு மட்டுமே சூழ்ந்திருக்கும் இந்நிஐம் எனக்கு கனவு. தூரத்து இடியோசைக்கு மகிழ்கின்ற வறண்ட நில உழவன் நான்.. மழை வந்த...