அவள்

பிரியங்களை
தேக்கியே வைக்கிற
அணைக்கட்டு நீ!
விளை மனம்                                 
காய்ந்து ஓய்ந்து
கருகிப் போனாலும்..
என்றாவது ஒருநாள்
பெருமழை பெய்யும்
பிரியம் பெருகும்
அவ்வளவே.. ❤💗

நின் நினைவு
வரின்
மோகம்
நீயே
வரின்
மோகனம்..

நீ சந்திப்பதாக 
சொன்னவுடனே
உன்னருகே 
வந்துவிட்டது மனது.
உடல் 
அப்புறம் வரும்.

எல்லா கூட்டங்களிலும்
தனித்திருப்பதும்
தனுத்திருக்கையிலெல்லாம்
களித்திருப்பதும்
உன் நினைவால் தான்..

மழை எப்பொழுதும் வரட்டும்
மண் வாசனையே
மகிழ்வு தானே..

இரவில் 
தனித்து உறங்கும் 
குழந்தை
அனிச்சையாக 
அன்னையினருகில்
சேர்வது போல்தான்
நம் பிரியம்.

நின் நினைவு சூழக் கழிகின்ற
நிகழ்காலம் போலன்றி
நீ சூழக் கழியட்டும்
அந்திம காலம்.

உன்னோடு வாழ்கிற
கனவுதான்
எனக்கு நிஜம்..
நீயன்றி
நின் நினைவு மட்டுமே
சூழ்ந்திருக்கும்
இந்நிஐம்
எனக்கு கனவு.

தூரத்து இடியோசைக்கு
மகிழ்கின்ற
வறண்ட நில
உழவன் நான்..
மழை வந்து மகிழ்விக்கலாம்
வராது துன்பிக்கலாம்.
எனக்கான மழை
என்றோ பொழிந்து
என்றாவது சேருமென
தினம்
தூரத்து இடியோசைக்கு
மகிழ்கின்ற
வறண்ட நில
உழவன் நான்.

நீண்ட
கருயிரவு நாளில்
இருளில் உன்னோடு
கதைக்கையில் தான்
உள்ளெங்கும்
நீண்ட நாளாய்
அணைந்த வெளிச்சம்
மீண்டும் ஒளிர்கிறது..

மிகுந்த சுமைகளோடு
உன்னிடம் வருகிற நெஞ்சம்
பகிர்கிறதலுக்கு பின்
இழகுவாகிற விந்தை
யாரோடும்
எனக்கு நிகழ்வதேயில்லை..


உன்னை சந்திக்கும்
அந்தத் தருணத்தில்
நான்
அழக்கூடும்
அணைத்துக் கொள்ளக்கூடும்
உச்சி முகர்ந்து
உணர்விழக்க கூடும்
உன் கால்களை
பற்றிக் கொள்ளக்கூடும்
உன் கரங்களை
பற்றிக் கொள்ளவேணும் கூடும்
ஏதும் செய்யாது
உணர்விழந்து
நிற்கக்கூடும்
நான் நானாக இன்றி
நீயாகி
கலந்தும் போகக்கூடும்
பிரியம் தலைக்கேறி
பிதற்றி
பித்தம் பிடித்து
உன் பெயர்
ஜெபித்தாவாறே
உன்னை சந்திக்கும்
அந்தத் தருணத்தில்
நான்
உயிர் துறக்கவும் கூடும்.

துருவங்கள் நாம்
பல நேரம்
எதிராக
சில நேரம் நேராக..
வாழ்வு
நான் உள்ளிருந்து
நீ வெளியிருந்து
நோக்க கடவது..
என் தியானத்தின்
அமைதி நீ
நின் தேடலின்
எல்லை நான்
எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்கப்பட்டு
இணைதலுக்கு
அன்பின் ஆதாரம் நாம்.

ஒளி பிறக்கையில்
திறக்கும்
கண்களுக்குள் நீ!
பனி விலகையில்
உலரும்
துளிகளுக்குள் நீ!
தசைகள் கூச்செறிய
தழுவும்
தென்றலுக்குள் நீ!

இந்த முன்பனி காலையில்
நீ துயில்ந்த நெஞ்சம்
இலகுவாயிருக்கிறது
அறையின் காற்றில்
இன்னும் உன் வாசம்
அழைந்து கொண்டேயிருக்கிறது
நீ நேற்றிரவு
குழைந்து துயில்ந்தாய்
என்பதற்கு சாட்சியாய்
பிணைத்திருக்கின்றன
சில மயிரிழைகள்
நேர்த்தியிழந்த மஞ்சம்
நின் வளைவுகளை
நியாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது
நம் இரவுக்கனவை
கவிதையாக்க
இன்னும் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறேன் நான்.

நாம் இங்கே வந்து போயிருக்கிறோம் 
சிலர் வாழ்ந்து போயிருக்கிறார்கள்.

நின் 
எல்லா சமூக கரிசனத்தையும்  
ஏற்கிறேன்.

ஒரு சந்திப்புக்கு பிறகு
ஒரு முத்தத்திற்கு பிறகு
ஒரு கூடலுக்குப் பிறகு
ஒரு வாழ்தலுக்குப் பிறகு
குறைந்த பட்சம்
திரவியமற்ற
நின் வாசனை
என் உயிரில்
கலந்த பிறகு.

உறக்கம் தோய்ந்த இரவுகளும்
உறக்கம் தொலைக்கும்
இரவுகளும்
உன்னாலே வாய்ப்பவை.

உடல்நலம் சரியில்லை என்கிறாய்
மேலதிகம்  சொல்வதில்லை
நண்பர்களோடு
பயணிப்பதாய் சொல்கிறாய்
மேலதிகம்  சொல்வதில்லை
சில நேரங்களில்
மனம் அலைகழிக்கிறது
என்கிறாய்
மேலதிகம்  சொல்வதில்லை
காதல் உரைக்கையில்
காமம் தெறிக்கையில்
'ம்'  என்ற
மறுமொழி தவிர
எதுவும்  சொல்வதேயில்லை

நீயில்லா வெறுமை

இதயம் நொறுங்கும் கணம்
சிசுவிறந்த பிரசவ துயரம்
இறப்புக்கு முந்தய இறுதிநொடி
நீயில்லாத வெறுமை
உடல் விட்டு
உயிர் பிரிந்து
ஊனமான நினைவு

நீயில்லா வெறுமை
 
என்றும் ஆறா
இதயத்தின் ரணம்
மரணத்தின் கனம்
நீயில்லா வெறுமை
என் இயல்பை தின்னும் அரக்கன்
என் சிரிப்பை செறிக்கும் பூதம்

நீயில்லா வெறுமை

உயிர் பிரிந்து
உடல் மட்டும் வாழும்
நரகக் கொடுவாழ்வு

நீயில்லாத வெறுமை

விரைந்து அழைக்கும்
சாவின் அழைப்பிதழ்.

நீயில்லை
என்கிற நிஐத்தோடு
ஒரு நொடியை
சில நிமிஷத்தை
பல மணித்துளிகளை
படாய் படுத்தும்
இந்த மனதென
எதையும் கடக்க முடிவதில்லை
எப்படி கடக்க
இப்பெரு வாழ்வை.. 😞

அவளுடைய சாயலை ஒத்த ஒருத்தியை
தேடிக்கொண்டிருக்கிறேன்
அவளைப் பிரிவதாக
அவளிடம் சொன்னபிறகு
அவளைப் பிரிவதற்கு
அவளிடமே காரணங்கள் பல இருந்தன
அவளுக்கு
என்னைப் பிடிக்கும்
என்னை,
இரவின் ஆழத்தில்
அறிவு ஆழ்ந்துறங்குகையில்
நீ எவ்வாறு
என்னுள் விரிகிறாயோ
அதுவே
எனக்கான நீ!

அவளைப் பிரிவதாக
அவளிடம் சொன்னபின்பு
அடம்பிடித்து
அவளிடமே சென்றது
என் அவள் மனது.
நான் பிரிவதாக சொல்கையிலும்
அக்கணம்
என்னை நீ சகித்து
அரவணக்கையிலும்
நம் பிரியம்
நிலை உயருகிறது.
அமைதியில்
தனிமையில்
உறக்கமற்ற இரவுகளில்
மனமுதிக்கிற
முதல் உயிர் நீ!.
எல்லா கணங்களிலும்
எல்லா நிகழ்வுகளினூடும்
எல்லா சிரமங்களினூடும்
எல்லா பொறுப்புகளினூடும்
என் அக்கறை
குறித்த விசாரிப்புகளை
நீ தவறவிடுவதேயில்லை.
பிரியத்தை அதிகம் சொல்லில் வைப்பவன் நான்.
செயலில் வைத்து
சேயாய் காப்பவள் நீ!

தற்காலிகமாய் மேகங்கள் மறைத்து
வெளிச்சம்
மட்டுப் படலாம்
ஒளி அதிகரிக்க
உள் நுழைதல்
நிச்சயம் நிகழும்
அதுவரை மட்டும்
அறை நுழையா வெளிச்சம் நீ!

மந்தையிலிருந்து பிரிந்து தொலைந்த ஆட்டைப் போல்
அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்
எப்படியும்
மீட்க நீ வருவாய்
என்ற நம்பிக்கையில்..
நீ தேடுவாய் என்பதால்தான்
தொலையவே விழைகிறேன்!

ஒரு மிடறு நீர் அருந்தி கொள்கிறேன்
உன் மீதான
காதல்
பீரிடுகையில்
காமம்
ததும்புகையில்
அணைக்க எண்ணி
கைகள் நீளுகையில்
முத்தமிட
உதடுகள் ஏங்குகையில்
ஐம்புலன்களும்
அடங்க மறுத்து
உன் நினைவால்
அனத்துகையில்
ஒரு பெருமிடறு நீரினை அருந்தி கொள்கிறேன்
தாகத்தோடு
தாபமும்
தணிய வேண்டி.

நீ புகைப்படம் தராத
ஒவ்வொரு முறையும்
என் வசதிபோல்!
உடைகளை அணிவித்து
உன்னை மனதில்
மாட்டி விடுகிறேன்.
கொட்டித் தேங்கி நிற்கும்
மழைநீரும்
அது தோற்றுவித்த
பள்ள, மேடும்
நிந்தன் அவதானிப்புகள்.
நீர்த்துளி தொடுகையில்
சிரிக்கும் மனம்
நீயெனைத் தொடுகையில்
சிலிர்க்கும்.
மழை உன்னை நியாபகப் படுத்திக்கொண்டேயிருக்கிறது.

இப்பெருமழை நாட்களில்
எல்லோருக்கும்
Red alert!
எனக்கு மட்டும்
Pro alert!
நான் பார்க்கும்
எல்லா
உன் வயதொத்த
பெண்களும்
உன் முகம் தாங்கியே
திரிகிறார்கள்
நீ கண்கள் கோளாறென்பாய்
ஆனால்
இது காதல் கோளாறு!

அழுத்தம் மிகுந்த இந்நாட்களில்
அதிகம் தேவை
உன் கண்கள்
உன் கைவிரல்கள்
உன் எல்லாமுமாகிய நீ!

எனக்கும் உனக்கும்
சிறு வித்தியாசம்
நீ என் காதல்
வேண்டாமென்று
எச்சரிக்கையாய் இருப்பவள்

நான் உன் காதல்
வேண்டுமென்று..

மனம் உலர்ந்து போகையில்
இதழ்கள் கேட்டால்
எங்கோ போகச் சொல்கிறாய்
இதயம் நனைய
இதயம் நிரம்பி வழியும்
நீதானே உதவ வேண்டும்..
தீயெரிகையில்
எப்படி ரயில் நிலையத்தில் சொல்வது!

It's a bliss, to travel in a pleasant morning,
When still sun hiding behind clouds....
When roads are graciously touched by the drizzling drops.... Chatting with someone close to your heart...
With the headsets on....
It's a bliss!

நீ பேசி நீண்ட
நேற்றைய இரவு
இன்னும் விடியவேயில்லை..
இந்த பகலிரவில்
எனக்கு மட்டும் தெரிகின்ற
நட்சத்திரங்களுடே
உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
காய்ந்த நிலத்தில்
பொழிந்த மழைபோல்
நேற்றைய இரவில் நீ!
ஈரம் என்றும் மிஞ்சும்..
தூரிகை கொண்டு வரையும்
ஓவியன் போல்
இரவில் நீ சிரிக்கும் போதெல்லாம்
கந்தர்வமாக உன்னை
வரைந்து கொண்டேன்
நீ வராதே போயின்
வாழ்ந்து கொள்ள..
நேற்று நீ பேசி முடிக்கும் வரை
நிலவும் நின்றிருந்தது
வானில்
அதற்கும் காத்திருப்பு
அவசியப் படுகிறது
என்போல்..
இலேசாகி கனக்கும்
இதயமும்
பயந்து தெளியும்
மனமும்
நீ அருளிய வரங்கள்
இந்நாட்களில் எனக்கு..
நின் எல்லா காரணங்களையும்
புரிந்து கொண்டு
ஏற்காத மனம்
எனக்கு வரமும் சாபமும்..
நான் இறக்கும் போதாவது
உன் எல்லைகளை தகர்த்துவிட்டு
இதழில் முத்தமிட வேண்டும்
நீ என்னை..
நீ பேசி நீண்ட
நேற்றைய இரவு
என்றும் விடியப்போவதேயில்லை.

என்
எதிரே நகரும் பெண்ணின் கண்ணில்
நீ!
என்
எதிரே சிரிக்கும்
பெண்ணின் இதழில்
நீ!
என்
எதிரே விரியும்
பெண்ணின் கூந்தலில்
நீ!
என்
எதிரே அழைக்கப்படும்
அநேக பெயர்களில்
நீ!

என்
எதிரே, அருகேயென
என் வாசம் வீசும்
வாழ்விடமெல்லாமும்
உயிரால் அருகிலும்
உடலால் தொலைவிலுமிருக்க
அடம்பிடிக்கிறவள் நீ!

உன்னை
உள்ளே வைத்துக்கொண்டு
வெளியே
காத்திருக்கிற வாழ்க்கை
கொடுமையானது!

நேற்றும் அவளிடமே
கதைத்துக் கொண்டிருந்தேன்
அவளது
கடந்த வாழ்வை
பழைய நினைவுகளை
நண்பர்களை
அலுவல் நிமித்தங்களை
அன்பு பாராட்டியவர்களை
பெற்றோர்களைப் பற்றி என
நேற்றும் அவளோடே
கதைத்துக் கொண்டிருந்தேன்
எனக்கு நானாய்
தினம் கடப்பதை விட
அவளோடு நானாய்
கழிவது அவசியம்.

நான் காதல்  கேட்க்கையில்
நன்றிகள் நிரம்பத் தருகிறாய்
நீ தந்த நன்றிகளைத்
தொகுத்துத் தருகிறேன்
பண்ட மாற்றாக
காதலைத் தா!

பிரியா என்று
பெயர் வைத்துக்கொண்டு
சேராது தவிர்ப்பவளை
என் செய்வது.. 🤔

எனக்கு உன் மீது ரெம்பக் கோபம்
அதனால்
உன்னை மறுபடி பார்க்கும் போது
இதழ்களில் முத்தமிடுவேன்
இறுக்கி அணைத்து கொள்வேன்
காதுகளில் சப்தமிடுவேன்
கன்னங்களை கிள்ளிவிடுவேன்
கூடிக் களித்து
கோபத்தை காதலாக்குவேன்.

உன்னோடு பேச முடியுமா என்று கேட்டே
தேய்கிறது தினங்கள்..
உன்னைப் பார்க்க
முடியுமா என்று சிந்தித்தே கழிகின்றன
மாதங்கள்..
உன்னோடு பழக முடியுமா என்று
சிந்தித்தே நகர்கின்றன
வருடங்கள்..
நீன்னோடு காதல்பழகி
களிக்க முடியுமா என்று
சிந்தித்தே கழிக்கின்றன கனவுகள்..

நீயும், நானும்
பேசாத, சந்திக்காத
பழகாத, கூடாத
ஒரு காதல் மறையை
ஸ்தாபிப்போம்..
நீயே அதன்
அரசியாய் இரு
நான் பேதமை
புலவன் மட்டுமே.

எல்லாம் கழிந்து புலர்கிற காலையில்
நீதான் நினைவாக இருக்கிறாய்


Will let u know!
R u in love with me?
Will let u know!
When will we meet?
Will let u know!
Do u ever kiss me?
Will let u know!
When we can have a cup of coffee?
Will let u know!
Do I have a place in your heart?
Will let u know!
When will I hold ur fingers and shred my tears off on it..?
Will let u know!
U have to let me know many!
Every time when u say 'will let u know'
A leaf from a tree falls by losing hope
Sun disappears slowly where dark engulf
A little boy plays across street grows older
An old man who cough often get expired
Will let u know
Keep me getting aged day by day!
Will let u know
Shredding my hopes like a hammer hits on the stone!
Will let u know
Keeps a heart little heavier than yesterday!
Remember,
Will let u know
Finally may keep me only on your memories!

உறங்கும் போதும்
உன் நினைவு சுமக்கும்
இதய‌ம் வரம்.



Velmurugan.b.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔