அவள் பாதங்கள்
அவள் கால்விரல்கள்
குறித்த கனவொன்று
கால்பதித்திருந்தது
கரிய இரவின்
கலைந்த நினைவில்
சற்றே நீண்ட பாதங்கள்
இரெண்டும் அவளது
அழகு நிலையங்களில்
அடிக்கடி
அழகுபடுத்திக் கொள்வாலென
நினைக்கிறேன்
அவசியமின்றி
பெருவிரல்கள் இரெண்டும் நீண்டு
தலைவன் போலும்
ஏனைய விரல்கள் எட்டும்
ஏவகம் பணியும்
சேவகர்கள் போலும்
அத்தனை ஒருங்கமைப்பாய்
அழகுமிளிர அமைந்திருக்கும்
பாதங்கள் அவளது
சதைமீறி நீண்ட சிறு
நேர்த்தி நகங்களில்
அவள் புனையும்
அழகு நிறங்கள்
அத்தனையும் அழகு
அவள் முகம்தவிர்த்து
பலமுறை பாதங்களில்
நெடுநேரம், குறுந்தூரம்
பயணித்திருக்கிறேன்
கண்கள் வாகனமாய்
கவ்விக்கொண்டு
குதிங்கால் உயர
பாதுகைகள் அணிந்து
அவள் நடக்கையில்
பயந்திருக்கிறேன்
பரிதவித்திருக்கிறேன்
பாதங்கள் நோகுமேயென்று
சிலகவிதைகள்
அவள் பாதங்களில் பிறந்து
என் வரிகளில்
வளர்ந்திருக்கின்றன
எத்தனையிருந்தும்
அவள் பாதங்கள் தடவி
விரல்கள் சொடுக்கி
நனவில் விழையாது
கரைந்து போன
கனவு காதல் பாதங்களவை.
Comments
Post a Comment