அந்நியன்
நுழைந்தததும் இயக்குகின்ற
தொலைக்காட்சி
அவனுக்கு மனைவி போல
பேச்சு துணைக்கு
செய்திகள் வசிப்பவனோடும்
செய்திகள் குறித்தும்
தொலைக்காட்சியோடு
பேசுதல்தான்
அவனுக்கு மனைவியின்
தொலைவை மறக்கச்செய்யும் போல
மடிக்கணினி மூத்த பிள்ளை
கைப்பேசி இளைய பிள்ளை
அவன் மாறிமாறி
அவற்றோடு நேரம் செலவழிப்பதால்
அப்படித்தான் படுகிறதெனக்கு
மூன்றையும்
அணைக்காது இயக்கி
அருகிலிருக்கையில்
அண்டவிடாத பொழுதில்
அவன் குடும்பத்தோடிருப்பதாய்
சமயங்களில் குழம்பிக்கொள்வேன்
அவன்கள் அவர்களாகையில்
அபத்தம் குறையினும்
அத்துணை முக்கியமா
அந்த காகித வெள்ளையப்பன்!!
Comments
Post a Comment