மயல்




சிவராமன் ஜீ , வணக்கம். 

மயல் வாங்கி ஓரிரு வாரங்களிலேயே வாசித்து முடித்து விட்டேன். சோம்பேறித்தனம் காரணமாக உடனே உங்களுக்கு எழுத முடியவில்லை. 

ஒரு கவிதையோ, கதையோ, நாவலோ, திரைப்படமோ எதுவாகினும் பார்க்கின்ற, படிக்கின்ற பொழுதில் மெல்ல ஆட்கொண்டு, சகலத்தையும் மறந்து பிணைத்துக் கொள்ளவேண்டும். நான் வைத்திருக்கும் ஒரு சிறு விதி ஒரு நல்ல கலைப்படைப்புக்கு அதுதான்.

வெகு நாட்களுக்குப் பிறகு நான் படித்த தமிழ் நாவல் மயல். எனது மேல்சொன்ன விதி வழி மயல் இருந்தது. நன்றிகள் உங்களுக்கு.

ஆரஞ்சு வண்ண அட்டை நிறத்தில் இருக்கின்ற பச்சை நதி உங்கள் நாவல். பரந்து  விரிந்ததும் கூட!. திருநெல்வேலியில், சுத்தமல்லி என்கிற கிராமத்தில் அக்கிரஹார வாசனையில் நானும் கொஞ்சம் வளர்ந்திருந்த காரணத்தினாலோ என்னவோ, எனக்கும் ஒரு சுரேஷய்யரைத் தெரியும். ஷ்யாமாவைத் தெரியும், ஒரு கிருஷ்ணாவைத் தெரியும், ஒரு நிலாவையும் கூட. எல்லா அக்கிரஹார கதைகளும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் போல. 

சீயக்காய், ponds பவுடர், தேங்காயெண்ணெய் என நீங்கள் ஆரம்பித்ததும் அடடா இது நம்ம ஏரியால்ல என்று மனம் ஒட்டிக்கொண்டது. சமையல் வல்லுனரான ஒரு மஹாதேவய்யரை எங்களை கிராமம் கொண்டிருந்தது. so, i got connected  easily. இந்த கதையின் பெரும்பாதி உங்க ஏரியா என்றும், நீங்கள் இதில் இறங்கி அடிப்பீர்கள் என்றும் முதல் சில அத்தியாயங்களிலேயே தெரிந்து விட்டது. அதே மாதிரி அடித்தும் ஆடியிருக்கிறீர்கள். ஆச்சர்யமில்லை எனக்கு. 

The ultimate purpose of a living being is to produce generations, என்கிற அறிவியல் விதி உங்கள் நாவலின் மையம். கிராமத்தில் சொல்லுவார்கள் "இரெண்டு பசிடே மனுசப்பயலுக்கு , ஒன்னு வயித்து பசி, இன்னொன்னு அதுக்கு கீழ இருக்கு" அப்படின்னு. நீங்கள் இரண்டையும் தத்துவமாகவும், சுவாரஷ்யமாகவும் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்ந்துகெட்ட குடும்பம்ன்னு கிராமத்துல சொல்லுற பின்னணியுள்ள கதாபாத்திரங்கள் அருமை. குறிப்பாக சிவராமன் ஜீ வாழ்வில் யார் இந்த ஷ்யாமா என்கிற சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறீர்கள். ஸ்ரீ குருவிடம் பேச வேண்டியதுதான்!. எனக்கென்னவோ நீங்கள்தான் கிருஷ்ணாவோ என்கிற வலுத்த சந்தேகம் வந்திருக்கிறது. நாமளும் ரெண்டு பிட்டு போட்டு விடுவோம்! ( kidding).

சமையல் குறித்த, சுவை குறித்த, உணவுகள் குறித்த நுணுக்கங்கள், குறிப்பிட்ட சமூகம் பயன்படுத்தும் பேச்சு மொழி குறித்த, பெண்கள், காமம், காதல், சபலம்  குறித்த detailing என very realized writing. that's why the connect is so intense. பாலக்காட்டு சித்தி, பெண் சாபம், கர்மவினை என 40 வயதுக்கு பின்னான மனநிலை குறித்த விவரிப்பு எல்லாம் பிரமாதம். படில்ஸ் சித்தப்பா, செந்தாமரை entry, சென்னை குறித்த வெளி நகர மக்களின் பார்வை என எல்லாவற்றோடும் connect செய்ய முடிகிற எழுத்து பலம். 

நிறைய அத்தியாயங்களில் மனித உணர்வுகள் குறித்தும், இயற்கை குறித்தும் நீங்கள் எழுதியிருக்கிற புரிதல், வாழ்வை நீங்கள் உணர்ந்து கடக்கிறீர்கள் என்று புரிய வைக்கிறது. தன்னை சுற்றி நடக்கிற நிகழ்வுகளை,மாற்றங்களை, மனிதர்களை உற்று கவனிப்பது எழுதுகையில் எவ்வளவு இயல்பை கொண்டுவருகிறது, வாசிப்பவனை எவ்வளவு ஆழமாக கதையோடு பிணைக்கிறது என்பதையெல்லாம் உணர முடிகிறது. அந்த வகையில் உங்கள் நாவல் ஒரு பாடம்..எழுத நினைக்கிறவர்களுக்கு. கீதாமுகூர்த்தம் குறித்த குறிப்பு ஒரு உதாரணம். இனிப்பு சதுரங்கத்திலிருக்கும் intro இன்னுமொரு உதாரணம். 

மனம் குறித்து, காமம் குறித்து என ஒவ்வொரு அத்தியாய அறிமுகமும் நான் ரசித்த ஓன்று.  சொல்லிக்கொண்டே போகலாம். உங்கள் மொழியில் சொல்வதானால் பந்தியில் வைக்கப்படும் முதல் பர்பி மாதிரி intros. 

ஒவ்வொரு அத்தியாயம் குறித்தும் எழுதலாம். நான் ஒவ்வொரு அத்தியாயம் எழுதுகையிலும் உங்கள் மனவோட்டம் என்னவாக இருந்திருக்கும் என்ற சிந்தையோடு வாசித்தேன. அது இன்னும் சுவாரஷ்யம்.  

படில்ஸ் கூட்டணி சகிதம் காட்டுக்குள் நுழைகிற ஏரியா உங்கள் ஏரியா இல்லை என்பது எனது கருத்து. முதல் பாதியில் இருந்த connect எனக்கு அந்த காட்டில் நடக்கின்ற அத்தியாயங்களில் இல்லை. i believe it's more of an imagination and you too explored that area. your limited experience on that domain may be the reason i believe. but it never slowdown the speed of the novel. I just felt so.. and my humble opinion it is. 

Overall i enjoyed reading. looking forward for the next novel. கிருஷ்ணாவின்(சிவராமனின்) சாகசங்கள் தொடரட்டும்.!

அன்புடன்,

வேல்முருகன் பாலசுப்பிரமணியன்.
7.19 am, 26/12/2025, சென்னை.

Comments

Post a Comment

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை