காக்கா கவிதை

காக்கா கவிதை :-



புத்தகத்தில் எல்லாம்
புதைந்திருக்க
கைகள் மட்டும்
காகங்களுக்கு
உணவிட்டுக் கொண்டிருந்தன

வந்தமுதல் காகம்
வயிறு நிரம்ப
உண்டபின்
வாய்கூவி அழைக்க
வந்துண்டன
ஏனைய காகங்கள்
நம்போலன்றி!

சில புறாக்களும்
சிறிது நேரத்தில் வந்தன
புறாக்கள், காகங்கள் போல்
கண்டதையும் உண்பதில்லையென
கவனித்ததில் தெரிந்துகொண்டேன்
ரசனைவாதிகள் என்போன்று!

காகங்கள் சண்டையிட
புறாக்கள் பயந்தோடின
நான் அசையவேயில்லை
சிறுவனாயிருந்தும்!

புறாக்களின்
உடலமைப்பும்
செயல்பாடுகளும்
அழகானவை
காகங்கள் போலன்றி

குரங்கிலிருந்து
வந்த நமக்கு
காகங்கள் தான்
மூதாதையர்கள்
கடுகளவும் சந்தேகமேயில்லை!  

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔