தேங்கிய உறக்கம்

தேங்கிய உறக்கம் :-

கண்களில் தேங்கிய
உறக்கத்தை
கண்ணாடிதனில்
பார்த்துக்கொண்டு நான்

நேற்றிரவும்
விடிந்தபின்பும்
பேசிய, கேட்ட
பேச்சுக்கள்
தேங்கிய உறக்கத்தின் பக்கத்தில்
செழுமையாய் முளைத்திருந்தன

என்றேனும் ஒருநாள்
எவருக்கும் தெரியாமல்
முளைக்க அவை
உறக்கத்தின் தியாகத்தால்
விதைக்கப்பட்டிருக்கலாம்

நீண்ட அந்த
தேங்கிய உறக்கத்தின்
உள் செல்கையில்
எண்ணற்ற சிரிப்பொலிகளும்
ஏகப்பட்ட கரவொலிகளும்
சிறிதும் பெரிதுமாக
கண்ணீர் துளிகளும்
வாழ்வின் வசந்த நினைவுகளாய்
அடுக்கி வைக்கப்பட்டிருந்தன

இன்னும் பயணிக்கையில்
புசித்துப்புடைத்த
வயிற்றேப்பமும்
புன்னகைகள் சிதறிய
தருணங்களும்
நிரம்ப இருந்தன

பொறாமையும்
பொறையும்
அன்பும் ஆங்காரமுமாய்
ஏக உணர்வுகள்
எங்கும் சிதறிக்கிடந்தன

தேங்கிய உறக்கத்தின்
விளிம்பில்
ஒரு தேவ உறக்கம்
வாய்த்திருந்திருக்கிறது. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔