மிக்கி மௌசும் நனைந்த சட்டையும்
மிக்கி மௌசும் நனைந்த சட்டையும் :-
வழக்கம்போல்
மகளை ஏமாற்றிவிட்டு
மறைந்திருந்து
கிளம்பிச் சென்றேன்
அலுவலகத்திற்க்கு
மகளை ஏமாற்றிய என்னை
மழை ஏமாற்றியது
சோவெனப் பொழிந்து
கால்களில் சேறும்
கைகளில் நடுக்கமுமாய்
தொப்பலென நனைந்து
தொடுகையில் வீட்டினை
எழுந்து வந்த
ஏமாற்ற மகள்!
யதார்த்தமாய்க் கேட்டாள்
"சட்டையில இருக்கிற
என் மிக்கியை ஏன் நனைச்ச" என
குளிரிலும் கொஞ்சம்
கொதிக்க ஆரம்பித்தது!!.
வழக்கம்போல்
மகளை ஏமாற்றிவிட்டு
மறைந்திருந்து
கிளம்பிச் சென்றேன்
அலுவலகத்திற்க்கு
மகளை ஏமாற்றிய என்னை
மழை ஏமாற்றியது
சோவெனப் பொழிந்து
கால்களில் சேறும்
கைகளில் நடுக்கமுமாய்
தொப்பலென நனைந்து
தொடுகையில் வீட்டினை
எழுந்து வந்த
ஏமாற்ற மகள்!
யதார்த்தமாய்க் கேட்டாள்
"சட்டையில இருக்கிற
என் மிக்கியை ஏன் நனைச்ச" என
குளிரிலும் கொஞ்சம்
கொதிக்க ஆரம்பித்தது!!.
Comments
Post a Comment