நவுரு
நவுரு :-
வராண்டாவில் விளையாட
வாய்ப்பளிப்பதில்லை
வழுக்கிவிழக்கூடுமென்று
மழையில் நனைந்தால்
சளிபிடிக்கும்
குடையோடு கூட
கூடலில்லை
இரவில் மொட்டைமாடி
எப்போதாவது மட்டுமே
இருள் ஏற்படுத்தும்
உளவியல் பிரச்சினை
எப்போதும் மண்டையில்
சாலைகள் ஆபத்தின்
சன்னதிகள்
சகுனம் பார்த்துக் கூட
சம்மதிப்பதில்லை
பூங்காக்களில்
மெதுவாக விளையாண்டால் போதும்
விழுந்து வரும்
விழுப்புண்
வரவே வராது
இனிப்புகள்
பல்கெடுக்கும்
புளிப்புகள் ஏப்பம் தரும்
ஏக எரிச்சலில்
இரண்டு வயது அவள்
எப்போதும் சொல்வாள்
கொஞ்சம் "நவுரு" என்று.

வாய்ப்பளிப்பதில்லை
வழுக்கிவிழக்கூடுமென்று
மழையில் நனைந்தால்
சளிபிடிக்கும்
குடையோடு கூட
கூடலில்லை
இரவில் மொட்டைமாடி
எப்போதாவது மட்டுமே
இருள் ஏற்படுத்தும்
உளவியல் பிரச்சினை
எப்போதும் மண்டையில்
சாலைகள் ஆபத்தின்
சன்னதிகள்
சகுனம் பார்த்துக் கூட
சம்மதிப்பதில்லை
பூங்காக்களில்
மெதுவாக விளையாண்டால் போதும்
விழுந்து வரும்
விழுப்புண்
வரவே வராது
இனிப்புகள்
பல்கெடுக்கும்
புளிப்புகள் ஏப்பம் தரும்
ஏக எரிச்சலில்
இரண்டு வயது அவள்
எப்போதும் சொல்வாள்
கொஞ்சம் "நவுரு" என்று.
Comments
Post a Comment