நேற்றடித்த வெயிலும், இன்று பெய்த மழையும்

நேற்றடித்த வெயிலும், இன்று பெய்த மழையும் :-

பஞ்சுபொதிகள் சூழ 
நெஞ்சம் வியர்வித்த வானம் 
பகலை இரவாக்கி 
பல் நடுங்கச் செய்திருந்தது 

கானல்நீராய் தகித்திருந்த 
தார் சாலைகள் 
தணல் குறைந்து 
தன்மையாய் 

அடிக்கடி கிளம்பி 
அலறவைக்கும் நாசிப்புழுதிகள் 
அடங்கி ஒடுங்கி 
அடக்கமாயிருந்தன 
அடைமழை வருகையால் 

கண்ணாடியில் பார்த்த 
முகத்தைவிட 
அழகாயிருந்தது 
தரைத் தண்ணீரில் 
தத்தளித்த முகம்

நேற்று அடித்த வெயிலுக்கு 
அலுக்கவுமில்லை 
இன்று பெய்த மழைக்கு
மணக்கவுமில்லை
நேற்றுபோல் 
இன்று இருப்பதில்லை 
என்றுணர்ந்த பல நான்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔