செல்லாக் கதை
செல்லாக் கதை :-

ஒற்றைக் கதை
உசுப்பியெழுப்ப
உட்கார்ந்திருந்தேன்
உறக்கம் தொலைத்து
நடுநிசியில்
தும்மல் வந்தது
தூக்கம் போலன்றி
அங்கே நீ
அனேகமாக
நினைத்திருக்க வேண்டும்
என்னை
உன் விரல்தொட
விழைகிற எனக்கு
விரல்தராது
காதல் செய்ய
கீழ்க்கண்ட கதை சொன்னாய்
அருவிமேல் அளப்பரிய
காதலிருப்பினும்
அருகில் செல்லமுடியாத
பிறப்புக்கு வருந்தாது
ஆயுள்முழுக்க
பார்த்துக்கொண்டே
வாழ்கிற வாழ்வை
வரமெனக் கருதும்
தொலைதூர
சிறு மரத்தின்
காதல் கதை அது
நீ நானாகப் பிறந்து - என்
கண்வழி கண்டு - உன்னை
காதல் புரிந்திருப்பின்
தெரிந்திருக்கும்
இந்தக்கதை உனக்கும்
செல்லாதென.

ஒற்றைக் கதை
உசுப்பியெழுப்ப
உட்கார்ந்திருந்தேன்
உறக்கம் தொலைத்து
நடுநிசியில்
தும்மல் வந்தது
தூக்கம் போலன்றி
அங்கே நீ
அனேகமாக
நினைத்திருக்க வேண்டும்
என்னை
உன் விரல்தொட
விழைகிற எனக்கு
விரல்தராது
காதல் செய்ய
கீழ்க்கண்ட கதை சொன்னாய்
அருவிமேல் அளப்பரிய
காதலிருப்பினும்
அருகில் செல்லமுடியாத
பிறப்புக்கு வருந்தாது
ஆயுள்முழுக்க
பார்த்துக்கொண்டே
வாழ்கிற வாழ்வை
வரமெனக் கருதும்
தொலைதூர
சிறு மரத்தின்
காதல் கதை அது
நீ நானாகப் பிறந்து - என்
கண்வழி கண்டு - உன்னை
காதல் புரிந்திருப்பின்
தெரிந்திருக்கும்
இந்தக்கதை உனக்கும்
செல்லாதென.
Comments
Post a Comment