அவனாகிய அவள்
அவனாகிய அவள் :-
அவனென்பதா
இல்லை வரலாற்று வழி
அவளென்பதா
இருக்கட்டும்
அவனென்றே விளித்து
அவனைக் கவனிப்போம்
துயிலெழுந்து
மேலெழும்பிக் கொண்டிருந்தான்
நான் அவனாக்கிய
வரலாற்று அவள்
வந்தவன் பிம்பம்
வழிந்தோடிய இவனில் தெரிய
பதறியடித்து ஓடினேன்
பதிவு செய்ய கணினி வேண்டி
கையில் கணினியேந்தி
காலால் நடந்து வருகையில்
தணிக்க இயலா
தன்மமாய் குளிர்ந்திருந்தான்
தன் நிழல் பிம்பத்தோடு
வார்த்தைகள் தேடி
வரிகள் சரிசெய்து
பதிவை பத்திரப்படுத்துகையில்
இவனாகிய தெளித்த நீரும்
அவனாகிய அந்திநிலவும்
மறைந்து போய்
மணத்துக்கொண்டிருந்தார்கள் - நான்
பதிவு பண்ணிய - இந்தப்
பத்திரக் கவிதையில்.
Comments
Post a Comment