கவனிப்பும் கவிதையும்

கவனிப்பும் கவிதையும் :-



மஞ்சள் வண்ண நிலவை 
நீல வண்ண வானில் 
சற்று முன்பு பார்த்தேன் 
இப்பொழுது 
நிலவு வெண்ணிறமாகி 
வானம் கருநிறமாயிருக்கும் 

நிறங்கள் அனைத்துமே 
ஒளிச் சிதறல்களின் 
நிகழ்வுகள் எனத் 
திடீரெனத் தோன்றியது 
காரணம் புரியவில்லை 

கருப்பும் வெள்ளையுந்தான் 
ஆதி நிறங்கள் 
ஏனையவையெல்லாம் 
இவ்விரண்டின் 
இடைச்சிதறல்களே எனவும் 

கால்களில் நின்றிருந்த 
கருநிறக் காக்கை 
கண்ணொற்றி ஏளனமாய் 
பார்ப்பதுபோல் இருந்ததவும் 
காக்கைகள் அமருமா எனவும் 
திடீரெனத் தோன்றியது 
காரணம் புரியவில்லை

வெயிலுக்கு அஞ்சி 
ஒதுங்குவதுபோல் 
நிலவுக்கு அஞ்சி 
ஒதுங்கிப்பார்த்தேன் 
சூட்டைப்போல
குளிரும் வதைத்தது 
வந்த காய்ச்சல் 
போகாமலிருக்கலாம் 

கிளம்புமுன் நிலவை 
கருவி கொண்டு 
கண்கிட்டப் பார்த்தேன் 
பருக்கள் வந்த
பருவப்பெண் வதனம் போன்றிருந்தது 
தூரம்தான் அழகு
அவ்வளவுதான் 
கவனிப்பும் 
கவிதையும்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔