இந்தத் தீபாவளி...

இந்தத் தீபாவளி...

இப்படித்தான்
எப்போதும் முடியும்
இந்தத் தீபாவளி

எண்ணைச்சட்டியில்
தன்னை முக்கி
அம்மா வெந்தெடுக்கும்
பட்சணங்கள் படைத்து

அதட்டி கேட்கும்
யார்யாருக்கோ
நூறு இருநூறு
தீபாவளிக்காசு கொடுத்து

அடித்து புடித்து
அம்மணமாய் இருப்பதுபோல்
ஆடைகள் வாங்கி

வெடிவெடித்து
பறவைகளுக்கு பகைவனாகி
விலங்குகளுக்கு வில்லனாகி
சொந்தக்காசில் நாசிக்கு
கந்தகச்சூனியம் வைத்து
காசைக் கரியாக்கி

கவர்ச்சி நடிகைகளும்
கனவு நடிகர்களும்
சேர்ந்து நடித்த
படங்கள் பார்த்து

செத்துக் கழியும் இந்த
வெத்துத் தீபாவளி
போலன்றி

விவரமாய்
அடுத்தவருடம்
கொண்டாடலாம்  என்னும்
உறுதிமொழி உல்லாசத்துடன்

இப்படித்தான்
எப்போதும் முடியும்
இந்தத் தீபாவளி.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔