கற்பிதங்கள்

கற்பிதங்கள் :-

விரும்பி வாங்கிய

காலணிகளை விடுத்து ஏனைய 
வீட்டுப் பிள்ளைகளின் 
காலணிகளைத்தான் 
தேடி அணிகிறாள்

பழச்சாறோ உயர் 
பண்டங்களோ 
அவள் என்றும் 
விரும்பியதில்லை 

வீதிக்கடை 
விளம்பரமற்ற 
பண்டங்களும் 
பதார்த்தங்களும் 
அறிமுகமில்லாமல் 
அவள் ஆர்வம்
கொய்கின்றன 

வண்ணமிகு 
வனப்பாடைகளை விடுத்து 
துண்டுகளும் பழைய 
துணிகளுமே 
அவள் விருப்பாய் இருக்கின்றன 

உயர்  பஞ்சுப் பொம்மைகளனைத்தும் 
உறங்குகின்றன 
உயர்  அரை அறைகளில் 
மரப்பாச்சிகளின்  முன்பு 
மண்டியிடமுடியாமல் 

அவள் தொடர்ந்து 
எத்தனையோ கற்பிதங்களை 
தன் செய்கைகளின் 
வாயிலாக
கற்பிக்க விரும்புகிறாள் 

முழுதும் மூளை 
நிரம்பியதான  
போலி நான் 
தொடர்ந்து 
தவறவிடுகிறேன் 
யதார்த்த கற்பிதங்களை. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔