டான் ப்ரொவ்னின் தி லாஸ்ட் சிம்பல் (Dan Brown's The Lost Symbol)
டான் ப்ரொவ்னின் தி லாஸ்ட் சிம்பல் (Dan Brown's The Lost Symbol) :-
பண்டைய எகிப்திய, கிரேக்க, ஹிப்ரு, இந்திய பழமைவாதத்தையும் அங்கங்கே கதையோட்டத்தோடு தொடர்புபடுத்தி தொய்வில்லாமல் எழுதியிருப்பது சுவாரஷ்யம். முடிவில் தொலைந்த ரகசியமாக அவர் குறிப்பிடுவது நமது முன்னோர்கள் காலங்காலமாக சொல்லிவரும் " "மனிதனே கடவுள்" என்னும் விஷயத்தைதான். ஏதாவது புதுசா யோசிக்கலாம் டான் பிரவுன். நாவலாசிரியர் இந்தியாவில் பிறந்திருந்தால் இன்னும் நல்ல நாவல்களை எழுதியிருப்பார் போல. கிறித்துவ பாரம்பரியத்தினைவிட பல்லாயிரமாண்டு பழமையான நமது தமிழ் கலாச்சாரத்தில் இத்தகைய செறிவுடன் எத்தனை நாவல்கள் வந்திருக்கிறது தெரியவில்லை பொன்னியின் செல்வனையும், உடையாரையும் தவிர.நேரமிருப்பவர்கள் ஒருமுறை படிக்கலாம்.
Comments
Post a Comment