உரையாடல்

உரையாடல் :-

இரட்டை தலையணை
தலைக்கு கொடுத்து
இடவலமாக
ஆடும் வீட்டிலிருந்து
அந்த வேப்பமரத்தினை
பார்த்துக் கொண்டிருந்தேன்

காற்றில் ஓரிலை
கடந்து வந்து
என்னருகில் வீழ
தாலாட்டும் ஊஞ்சலாய்
வீடு தகவமைப்பு
பெற்றிருந்தது

வேம்பசைகையில்
வீடசைவதாய்
நொடிப்பொழுது
உணர்ந்த தருணம் - ஒரு
கவிதை தந்ததை
வேம்புக்கு எப்படியாவது
சொல்லவேண்டுமென
விழைகையில்

என்னருகே வீழ்ந்த இலை
வந்த இடம் நோக்கி
வழி பெயரத்தொடங்கியிருந்தது.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔