துளிக்கவிதை

துளிக்கவிதை :-

மழையென்னை எப்பொழுதும்
ரசிக்க வைக்கும் 
மனதிற்க்குள்  கவிதை 
விதைக்கும் 

நேற்றும் இன்றுமென 
தினமும் 
துளிர்க்கின்றன 
விண்ணின் துளிகள் 
மண்ணை நோக்கி 

நான் இமையசைக்கும் 
பொழுதிற்க்குள் 
எங்கிருந்தாலும் 
இரெண்டொருதுளிகள் 
நனைத்து விடுகின்றன 

சாலைவழி
சலசலக்கும் நீரில் 
சற்றே கால்கள் பட்டதும் 
சிரசில் சிறுகவிதையொன்று 
சட்டென முளைக்கிறது

மற்ற காலங்களில்
அவளோடு 
கைகோர்த்து நடக்கும் நான்  
மழைக்காலங்களில் 
துளியோடு கோர்க்கிறேன் 

மழை நினைப்பை 
தள்ளிவைத்து 
மற்ற நினைப்பை
எண்ணிக் கொள்ள
நினைக்கையில் 

கோபத்தில் 
கொட்டித்தீர்க்கிறது 
மறுபடியும் மழை 
புவிக்கும் உள்ளேயும்
அதனால் 
எனக்கு உள்ளேயும்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔