பிஞ்சுக்காலம்

பிஞ்சுக்காலம் :-

கதிரவன் விழுந்து 
கண்கள் திறந்ததும் 
ஆரம்பிக்கிறது ஆட்டம் 

கடைபரத்தலும் 
வீதி துரத்தலுமாக 
பொழுதுகள் கடக்க 
வீங்கிப்போனதாக 
புலம்புகின்றன 
முதிய கால்கள் 

சிந்திச் சிதறிய 
நெய்ப்பருக்கைகளை 
அந்திப்பொழுதில் 
காக்கைகள் 
உண்டு முடிக்கையில் 
துயிலெழுந்து 
ஆரம்பிக்கிறது 
வானம் கறுத்து 
வண்ணம் தொலைக்கும்வரை 
தொய்யாது தொடரும் 
தினசரி இரெண்டாமாட்டம்

சிறுஉணவும் 
பெருஉணவும் 
உண்டுமுடித்து - இரவு 
உறங்கப்போகையில் 
பிஞ்சுக்கால்களைப் பிடித்தவாறே 
முதிர்ந்த கைகள்  
ஏங்குகிறது 
கடந்துபோன 
பிஞ்சுக் காலம்தனை நினைத்து. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔