ஆறாம் பூதம்
ஆறாம் பூதம் :-
தீக்குள் விட்டு விடும்
எத்தனிப்பு எப்பொழுதும்
கொட்டும் மடமழை
கொன்றுவிட தள்ளுதலும்
சூறாவளி சுற்றித்தின்றிட
சூடமேற்றித் தருதலும்
நிலப்பூகம்பம் எங்குவரினும்
நின்றுகொண்டு அழிய விழைதலும்
இடி, மின்னலென
ஆகாய ஆபத்துகளை
அன்பொழுகத் தேடுதலும்
வாய்க்கிறது எனக்கு
நீ நின்ற இடம் நின்று கொண்டு
தந்து சென்ற
காதலாகிய
ஆறாம் பூதத்தை
நினைக்கையிலெல்லாம்.
தீக்குள் விட்டு விடும்
எத்தனிப்பு எப்பொழுதும்
கொட்டும் மடமழை
கொன்றுவிட தள்ளுதலும்
சூறாவளி சுற்றித்தின்றிட
சூடமேற்றித் தருதலும்
நிலப்பூகம்பம் எங்குவரினும்
நின்றுகொண்டு அழிய விழைதலும்
இடி, மின்னலென
ஆகாய ஆபத்துகளை
அன்பொழுகத் தேடுதலும்
வாய்க்கிறது எனக்கு
நீ நின்ற இடம் நின்று கொண்டு
தந்து சென்ற
காதலாகிய
ஆறாம் பூதத்தை
நினைக்கையிலெல்லாம்.
Comments
Post a Comment