நனைந்த காகமும், நானும்

நனைந்த காகமும், நானும் :-

மழையில் நனைந்த 
காகம்தனை
பார்த்துவிட்டு 

வந்த மகள் 

வீடின்றி காகம்  
வீணாய் நனைவதைச் சொல்லி 
வருத்தப்பட்டாள் 

காகத்திடம் 
நனைவது குறித்து 
கேட்டதாகவும்
அதன் அம்மா 
வீட்டிலிருந்து 
அனுப்பிவிட்டதாகவும் 
சொல்லி யோசித்தவள் 

காகத்துக்கு 
காய்ச்சல் வந்தால் 
நம்ம டாக்டர் தாத்தா 
ஊசிபோடுவாரா?
காகம் மருந்து 
குடிக்குமா? என எனக்கு 
கடின வினா எழுப்பியவள்  

என்ன செய்யலாம் 
எனக் கேட்டதற்க்கு
படுக்கையறையில் 
தனதிடத்தை 
காகத்துக்கு 
தந்துவிடலாமெனச்
சொல்லி 
விளையாடச் சென்றாள்

காகம் போல் 
நானும் நனைந்திருந்தேன் 
மழையிலில்லை.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔