எல்லா இருவருக்கும்



சிலமுறை அவனையும்
பலமுறை  அவளையும்
அங்கீகாரமாய்
முழு இசைவின்றிப்
புணர்வதர்கிடையில்
எப்போதாதவது வாய்க்கிறது
இசைந்த மனிதக்கூடல்
இருவருக்கும்

நினைவுகளில்
நிர்வாணப்படுத்தி
கனவுகளில்
கற்பழிக்கும் மிருகம்
விழித்துக் கடக்கையில்
துளிர்க்கிறது
மனிதருக்கான ஞானம் - இரு
மனங்களுக்கிடையே

அவள் நினைவை
அவன் புணர்வதும்
அவன் நினைவை
அவள் புணர்வதும்
தொலைவுகள் உணர்த்தும்
தொல்லை நிகழ்வு

கடக்கும் உருவில்
கண்தேடியோ, கால்கள் தேடியோ
காதல் தேடியோ
கனத்த எல்லாந் தேடியோ
கனக்கிறது மனம்
அவர்களுக்கு

வயிற்றுப் பசிக்கும்
வயதின் பசிக்கும்
போராடி முடிக்கையில்
புலப்படுகிறது
வாழ்தல் இலக்கணம்
தாமதமாய்

உணர்ந்ததை நினைத்து
உருப்படியாய் வாழ
இன்னொரு பிறவி
இழி மனிதனாய் வேண்டும்
எல்லா இருவருக்கும்
எங்கள் புவியுலகில்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔