August 2024
உன் சுவாசக் காற்றையும் என் சுவாசக் காற்றையும் தாங்கிச் திரிய போகிறது இந்நகரம் இன்னும் சில தினங்களில் நிதானமாக இருக்க என் இதயத்தைக் கேட்டுக் கொள்கிறன் உன் பேரன்பை பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் உற்சாகத்தில் பித்து பிடிக்கும் மனமும் வாய்க்கப்போகிறது உன்னுடைய எல்லா நேரமும் எனக்கு வேண்டும் எனும் குழந்தை மனதும் எல்லாம் புரிந்த பக்குவ மனதும் சண்டையிடப்போகின்றன.. உலகின் அதி வேகமான இரு வாரங்களில் என் இதயம் செயலிழக்காது இருக்கட்டும். ************************************************************************ உன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொழியாத மேகத்தைக் கண்டேன் நேற்று காத்திருக்கும் வளை கடைகளையும் நீ அணிந்து தேர்ந்தெடுக்க சண்டையிட்டு காத்திருக்கும் துணியகங்களையும் நேற்று கண்டேன் நீ விமான நிலையம் வந்தடைந்து திரும்பிச் செல்லும்வரை மகிழ்ந்து ஒளிரப்போகும் இந்நகரைக் காண அத்தனை ஆவலாயிருக்கிறது. ***************************************************************************** இலேசாக தூறிக்கொண்டிருக்கிறது மழை நனைய அடம்...