Posts

Showing posts from 2018

போதுமடி எனக்கு!

கேள்விக்குறியாய் தொக்கி நிற்கும்  நீ பதிலளிக்கா  எல்லா குறுந்செய்திகளுக்கும் பின்  நான் கற்பனை கொள்கிற கணமும்  நீ கவனித்து கடக்கிற மனமும்   சுவடுகளை பதித்துக்கொண்டே வருகிறது!  எனக்கு நீயாயும்  உனக்கு நானாயும்  நாம் ஆகியிருப்பதில்  இக்குறுஞ்செய்திகளுக்கு  பெரும் பங்குண்டு!  காற்று புழுதி வாரி  வீசிக்கொண்டிருந்த  ஒரு பிற்பகல் பொழுதில்  அனுப்பிய ஒரு குறுஞ்செய்தியில்  நேசம் வாரித்தூற்ற  என்னுள் விதைந்தவள் நீ! குறுஞ்செய்திகளால்  பிரியம் வளர்த்து  பிணைந்து கிடக்கும் மனங்கள்  வாய்த்தவர்கள் நாம்! மகிழ்பவர்கள் நாம்!  வாழ்க்கை வரைமுறைகளில் பிளந்து  நேசங்களின் வரைமுறைகளற்ற  வெளியில் இணைந்து கிடக்கிறோம்  பிரியமான நாம்! குறுந்செய்திகள் நம் இணைப்பான்கள்  நம்மை பிணைப்பான்கள்! நீ நீயாயும்  நான் நானாயும் எங்கோ  மரித்து போகையில்  முன்னே உதிரும் கண்ணீரின் துளி  எனதாக சாபமும்...

உன்னவனின் அறை

Image
கடித்து தடித்த காவி ரொட்டி! என்றோ குடித்து இன்றும் கழுவா காபிக்கோப்பை! அசைந்துகொண்டேயிருக்கும் அரைக்குடுவை அருந்தும் நீர்! கொஞ்சம் படித்துக் கவிழ்த்துப்போட்ட கலைஇலக்கியம்! கனவுகளில் கலைந்து எங்கும் சிதறிக்கிடக்கும் உன் நினைவுகளென வாழ்வின் சாட்சியாய் நிரம்பிக் கிடக்கிறது காலைக்கதிரின் கால்கள் பதிந்த உன்னவனின் அறை! 

உன்னாலே வாய்த்தவை

Image
உயிர் உருக கரைந்தோடும் இரவுகள் என்றும்  நீ தருபவை!  குறுகிய செல்பேசி  தன் குறுகிய திரைதனில்  காண்பிக்கும் முகம்தனில்  விரிந்து வியாபிக்கிறது  எனது வாழ்வு!  நானே பேசிக்கொண்டிருப்பதாய்  நீ சொல்லிக்கொண்டிருக்கிறாய் யார் பேச வைப்பது  என நான் கேட்கையில்  வெளிப்படும் உன் குறுநகையில்  வியாபிக்கிறது நம் நாம்! நாம் இருவரும் இரூடலில்  தனித்திருக்கும்  ஓர் ஆத்மா  என்கையில்  நீ  அறிவிலீயாய் சிரிப்பதுவே  என் உள்ளுணர்வு  உன் நோக்கி ஈர்க்கப்பட பெருங்காரணம் !  உறக்கம் கண்வழி வந்து  கால்களை நடுங்கச் செய்யும் பொழுதுகளிலும்  துயிலச் செல்லாது  என்னோடு உரையாடுகிற  நீ எப்படி நீயாவாய்  நீ நான்!  நான் நாம்! இறுதியாய் உரையாடலில்  நான் பார்த்த முகம்  இன்னும் நியூரான்களில்  உரமேற்றிக்கொண்டே  உயிர் உருக   இரவு கரைத்த  உரையாடல்கள்    நானே பேசிக்கொண்டிரு...