Posts

Showing posts from August, 2022

யாதாக இருக்கமுடியும்?

தொடர் இருமலால் தூக்கம் தொலைத்த  தொடர் இரவுகள்!  நேற்று பெய்த மழை இன்று இல்லையப்பா படுத்தியெடுக்க எனும் சன்னல் வழிச் சிந்தனை!  அவசர பிராயாணம் அளித்த முதுகுவலி!  மாத இறுதியின் மனதை இறுக்கும்  வேலைப்பளு!  உடல்வாதையில் உலழும் சூழல்!  என  எல்லாக் கதவுகளும் இறுக்க அடைத்த பிறகும் நான் புன்னகைக்கிறேன் எனில் காரணம் நீயின்றி யாதாக இருக்கமுடியும்!💐

எனது துருவநட்சத்திரம் 🌟

Image
  உணர்ச்சிகள் மேலிட வார்த்தைகளற்று போகிறேன் இந்நாட்களில் நீ அருகிலிருக்கையில் தொலைவிலும் தொலைவிலிருக்கையில் அருகாமையிலும் உணர்தல் பல சமயங்களில் ரணமாகவும் துயராகவும் இருக்கிறதாகிறது வாழ்வு! பிரியத்தின் ராட்சசியை அருகிலிருந்தும் பாராது தொலைவு நோக்கிய நெஞ்சம் கணக்கிற இரத்த அழுத்தம் அதிகரிக்கிற மரணச்சிந்தனை எழுகிற பயணம் யாருக்கும் வாய்க்காதிருக்கக் கடவதாக!  நீ ஒவ்வொரு முறை  நீங்கிச் செல்கையிலும் என் இதயம் பிய்ந்து கதறும் குழந்தையென நின் கால்கள் பிடிக்க வருவதனை  என் கண்பார்வை வழி நீ உணர்ந்திருக்கக்கூடும்!  ஒரு நொடி கோபமுற்று மறு நொடி விரக்தியின் விளிம்பில்  மீண்டும் பிரியம் பெருக்கெடுக்கிறது உன் மேல்! உனது  இந்த வருகை எனக்கு எனையும் நானறியாத உனையும் அருகிலழைத்து வந்து  பிரியத்தின் பேரலையை மறு அறிமுகம் செய்திருக்கிறது! எனது பலமும் பலவீனமாகிய நீ எனது பேரண்டத்தின் புன்னகைக்கும்  துருவ நட்சத்திரம்! 🌟 நீ இல்லம் வந்த தினம் எனக்கு பிடித்த வசந்த தினம்! இன்றும் நினைவில் இங்கிருந்து போகாதிருக்கிற உன்னை நீ பேசியவற்றை அமர்ந்த இடங்களை உனது அதிசய முகபாவங்களை ந...