யாதாக இருக்கமுடியும்?
தொடர் இருமலால்
தூக்கம் தொலைத்த
தொடர் இரவுகள்!
நேற்று பெய்த மழை
இன்று இல்லையப்பா படுத்தியெடுக்க
எனும் சன்னல் வழிச் சிந்தனை!
அவசர பிராயாணம்
அளித்த முதுகுவலி!
மாத இறுதியின்
மனதை இறுக்கும்
வேலைப்பளு!
உடல்வாதையில்
உலழும் சூழல்!
என
எல்லாக் கதவுகளும்
இறுக்க அடைத்த பிறகும்
நான் புன்னகைக்கிறேன் எனில்
காரணம் நீயின்றி
யாதாக இருக்கமுடியும்!💐
Comments
Post a Comment