Posts

Showing posts from November, 2023

உள்ளேயும் வெளியேயும்!

Image
நீதான்  இன்று, இங்கு  மழையாய்ப் பொழிகிறாய்  நேற்று  கொஞ்சம் மஞ்சள் பூசிய  வெயிலாக  பிறிதொரு பின்னாளில்  கதகதப்புத் தேடும்  குளிராக  கார்கால  இலையுதிர்க்கும்  தென்றலாக  சில நாட்களில்  கொஞ்சம் அரிதாக குழந்தை பயமளிக்கும்  புயலாகவும் நீ! அதே நீதான்  நீதான்  இன்று, இங்கு எப்பொழுதும்  மழையாய்ப் பொழிகிறாய் உள்ளேயும் வெளியேயும்!.

மாயக்காரி! (Magician)

Image
எப்பொழுது விடியுமங்கு  என்றுதான்  இங்கு எனக்கு  தினம் விடிகிறது  காத்திருப்பில்  காலம் கரைகையில்  இதயம் என்னவெல்லாமோ  செய்கிறது  காற்றில் குளிர் வீசும்  இப்பொழுதில்  பறக்கும் ஒற்றைப் பட்டாம்பூச்சியை  உன்னித்துப் பார்த்தவாறே  சிரித்துக் கொண்டிருக்கிறேன்  நேற்று  அவ்வளவு கணமாக ,  காலநிலை போல  இருண்டே இருந்தது  மனமும்  உன்னிடம் பகிர்ந்தும்  அவ்வளவாக குறையவில்லை  இடியாய், மின்னலாய்  அழுத்திய பாரம்  நீ  குரல் வழி அனுப்பிய  இரவு, இறுதிக்  குறுஞ்செய்தியில்  மலையளவு பாரம்  இறகாய் பறந்து போனது  நீ  எனக்காக  எப்பொழுதும்  சொற்களின் வழி  புன்னகையின் வழி  தரிசனங்களின் வழி  மாயங்கள் நிகழ்த்துகிறாய்  மந்திரங்கள் செய்கிறாய்  மகுடிப் பாம்பாய்  என்னை வியாபித்துக் கொல்கிறாய்! ஆயிரம் வண்ணத்து பூச்சிகளையும்  ஒரு  கோடி நட்சத்திரங்களையும்  சில நூறு நாய்குட்டிகளையும்  கொஞ்சம் வண்ண பூக்களையும்  மானசீகமாய்...

வேண்டுதல்!

Image
     இதயம்  நெகிழ்ந்திருக்கும் இப்பொழுதில் மழைக்கு முந்தைய இருள் சூழ்ந்திருக்கும், உனை மறக்கவிடாது   செய்கின்ற  மழை  பொழியக் காத்திருக்கும்  அதிசய இத்தருணம்  முடிவதற்குள் வார்த்தைகள்  முண்டியடித்து  என் மூளைதனை குழப்புகின்ற   நெருக்கடியில் செல்களெல்லாம் நீ தீவிரமாய் வியாபித்து  சிந்தனையை நெருக்கும்  இந்நொடியில் ஒரு நல்லிசை உன்னை விட்டுத் தள்ளியிருக்கும் துயரத்திற்க்கு சிசுவாய் கண்ணீர்  உகுக்கச் செய்க்குகையில்  இம்மையும் மறுமையும் ஏழு பிறப்பும் பிரியத்தால் பேரன்பால் காதலால் காமத்தால் நீயே எனை ஆட்கொள்வாயாக தேவி என எண்ணும்  இம்மணிப் பொழுதில் உயிரின் நுனியில், ஆத்மாவின் அடியாழத்தில் வந்தமர்ந்து கொண்டு உயிரை உருக்கி உளறச் செய்து புன்னகையும் போரட்டமுமாய் பசலையும்  பரிதவிப்புமாய்  மனதை எப்பொழுதும் கொந்தளிக்க செய்வதுமாய் எனைப்படுத்தியெடுக்கிற உன்னிடம்... இனியும் முடியாதென்பதால் மன்றாடி இப்பொழுது கேட்கிறேன் என்னோடு வந்துவிடு என் உயிரைக் கொடுத்தாயினும் உன்னை பார்த்துக் கொள்கிறேன்.