வேண்டுதல்!
இதயம்
நெகிழ்ந்திருக்கும்
இப்பொழுதில்
மழைக்கு முந்தைய
இருள் சூழ்ந்திருக்கும்,
உனை மறக்கவிடாது
செய்கின்ற
மழை
பொழியக் காத்திருக்கும்
அதிசய இத்தருணம்
முடிவதற்குள்
வார்த்தைகள்
முண்டியடித்து
என் மூளைதனை
குழப்புகின்ற
நெருக்கடியில்
செல்களெல்லாம்
நீ தீவிரமாய்
வியாபித்து
சிந்தனையை நெருக்கும்
இந்நொடியில்
ஒரு நல்லிசை
உன்னை விட்டுத் தள்ளியிருக்கும்
துயரத்திற்க்கு
சிசுவாய் கண்ணீர்
உகுக்கச் செய்க்குகையில்
இம்மையும்
மறுமையும்
ஏழு பிறப்பும்
பிரியத்தால்
பேரன்பால்
காதலால்
காமத்தால்
நீயே
எனை ஆட்கொள்வாயாக தேவி
என எண்ணும்
இம்மணிப் பொழுதில்
உயிரின் நுனியில்,
ஆத்மாவின் அடியாழத்தில்
வந்தமர்ந்து கொண்டு
உயிரை உருக்கி
உளறச் செய்து
புன்னகையும்
போரட்டமுமாய்
பசலையும்
பரிதவிப்புமாய்
மனதை எப்பொழுதும்
கொந்தளிக்க செய்வதுமாய்
எனைப்படுத்தியெடுக்கிற
உன்னிடம்...
இனியும் முடியாதென்பதால்
மன்றாடி
இப்பொழுது கேட்கிறேன்
என்னோடு வந்துவிடு
என் உயிரைக் கொடுத்தாயினும்
உன்னை பார்த்துக் கொள்கிறேன்.
Comments
Post a Comment