Posts

Showing posts from February, 2024

Your Kid!

Image
There is a kid inside here Who is very cute Who is so lovely  Who is charming As like you. The kid is yours Who born to you  Came to this world alive because of you  He who knows nothing except  You and  your Love! For him  You are the world You are the destiny You are the purpose you are his everything! All your expressions All your emotions Love, hope, sadness, and happiness  multiplied multifold inside his small heart It's beating with your name..all the time Remember! Already he has a feeling that  He didn't get the opportunity  To be with you To study with you To work with you He is so unfortunate he feels often He has never been in your proximity much He has never been with you alone for a moment He has never been blessed enough to have your touch and smell He is not enough lucky as he often feels The kid ( inside me ) was found by you  He got nurtured and grown by you He realized love from you  You are his mother You are his ...

வினோதங்களின் வினோதம் நீயெனக்கு!

Image
வினோதங்களின் வினோதம் நீயெனக்கு! நீ உனதன்பை  உரைக்கும் தருணத்தில் உன் மடியில் பெருமகிழ்வில்  உயிர் விடுதல்  பெறுதற்கரிய பெருவரமென்று   எண்ணுவதுண்டு.  யாருமற்றதாயிருக்கும் இரயிலில் மயக்கும்  அவ்விரு கன்னங்களையும்  கதைகள் பேசும்  ஆச்சர்ய விழிகளையும்  பருகிக்கொண்டே பயணிக்கும் கனவு எனக்குண்டு.  சாலையில் அழகிய மாலையில் என் பின்னமர்ந்து நீயோ உன் பின்னமர்ந்து நானோ மயங்கிப் பயணிக்கும் நாள்களை நனவாக்கும்  பிரக்கை எனக்குண்டு உனது  நீண்ட கால் விரல்களைப் பற்றிக் கொண்டு கை விரல்களையும்  பிணைத்துக் கொண்டு அந்த ஒளிரும்  கண்களை நோக்கியவாறே மனனமாய்  கவிதை படிக்கும் ஆழ் விருப்பமுண்டு நான் நம்பாக் கடவுளர்களை உன் மகிழ்விக்காய் வேண்டிக்கொண்ட வரலாற்று மாயங்கள்  நிகழ்த்துமுன்னை உச்சிமுகற  நான் செய்யும் தவங்கள் நிறையவுண்டு..  உனதடிவயிற்றின் குளிர்ச்சியில் அங்கங்கள்  கொஞ்சங்கொஞ்சமாய் வளர உன் வழி பிரசவித்து மார்ப்புப் பாலுண்டு உன் மகவாய் மடியில் தவழும் போராசை  எல்லாப் பிறவியிலும் எனக்குண்டு..  "டேய்" என்றும் "...

My guardian angel

Image
I am thinking again and again Going back and forth on  my thoughts My days My memories How did you come in?  How did you connect deeply?  How did you enter into my personal proximity?  How did I start loving you?  When do I start missing you?  Who you are to me?  Where you were?  Endless question.. No answers.. But I am happy now Feel complete  More productive  More satisfied Love everyone  Able to sense the beauty around me Enjoy living..  You made it possible..  The moment you said you love me My nightmares become dreams My bitterness becomes sweet  My dark becomes light My sadness replaced with happiness Miracles started happening  Stars started falling for me You litted the light on the dying life You are magic happened in my life  You are the synonym of my love You are the eternity I choose upon now You are undoubtedly my angel My guardian angel!

முத்தம் ( மீள் )

Image
மகளின் முத்தம்:-       கன்னத்தோடு கன்னம் ஒட்டி அவள் இமைகளுக்கிடையில் பார்வைதனைச் செலுத்தி அவள் விழி வழி இவ்வுலகம் காண விழைகையில் என் கன்னத்தில் பதிகிறது ஒரு ஈர முத்தம். முத்தம் என்பது என்ன?. ஏன் ஒரு குழந்தை முத்தமிடுகிறது? முத்தத்திற்க்கு முன் பின் நடக்கும் உடற்செயலியல் என்ன? ஏன் முத்தங்கள் பொதுவாக கன்னங்களிலும், உதட்டிலும், புறங்கையிலும், நெற்றியிலும் மட்டும் அதிகமாக இடப்படுகிறது?. குழந்தையின், காதலியின், நட்பின்,பெற்றவர்களின் முத்தங்கள் ஏன் வெவ்வேறு உணர்வுகளை உணரச்செய்கிறது என்ற எண்ணற்ற சிந்தைனைகளை மனம் கடக்கையில் இன்னொரு முத்தம் கிடைக்கிறது எனக்கு. என் மகளின் முத்தம் கிடைத்த  மறுநொடி நான் மரித்துப் போனால் சொர்க்கம் கிடைப்பதாக நான் கனவுகள் கூட காண்பதுண்டு.குழந்தைகளுக்கு முத்தம் பற்றிய அறிவென்பது முத்தம் மூலமாக குழந்தைக்கு கடின உணவுகளை தாயானவள் மென்று ஊட்டிய பழக்கம் (Kiss Feeding) மூலமாக பதிவான பழக்கமென அறிவியல் சொல்கிறது. அப்படியெனில் தாய்தான் முத்தத்தின் ஆதாரம்.என் மகளில் முத்தங்களில் மனைவியும் ஒளிந்திருக்கிறாளோ?. பைபிளின் பழைய அதிகாரத்தில் முத்தங்களைப் பற்றி...