எனக்கு இரயிலைப் பிடிக்கும்
எனக்கு இரயிலைப் பிடிக்கும்
பட்டாம்பூச்சிகளைப்போல
பம்பரம் சாட்டைகளைப் போல
பல்லாங்குழி போல
கோலிக்குண்டுகளைப்போல
குச்சிக்கம்புகளை போல
எட்டுக்கட்ட பாண்டி போல
கலச்சாங்கள் விளையாட்டுபோல
நீரில் தொலைந்து தொடும் தொட்டுப்புடிச்சிபோல
வெயிலந்தம்மன் கோவிலருகில்
வெறிபிடித்து விளையாடிய மட்டைப்பந்து போல
எனக்கு இரயிலையும் பிடிக்கும்
உன்போல்
பிரியமானவர்களை ஏற்றிக்கொண்டு மறையாத
நேற்றைக்கு முந்தைய தினம் வரை
எனக்கு எல்லா இரயிலையும் பிடிக்கும்.
Comments
Post a Comment