சதுர்த்தி
களைகட்டத் தொடங்கியிருந்தது
சதுர்த்தியின் திருவிழா அங்கு
தொலைவு தேசத்தில்
நினைவில் நிற்பதில்லை
எந்தவொரு
பிறந்தவூர் விழாவும்
காரணங்களை
வரிசைப்படுத்துவதில்
கவனமில்லை
கணபதியின் தோற்றம் குறித்த புரிதலும்
காரணமாயிருக்கலாம்
சொந்தங்களின்
கொண்டாட்ட புகைப்படத்திலிருந்த
பலகாரங்களைப் பார்த்துவிட்டு
"கொழுக்கட்டைன்னா என்னப்பா" என
அவள் கேட்ட கேள்விக்கு
"அது கேக் மாதிரி ஒரு பண்டம்டா"
எனக் கூறி தப்பித்த
அந்த ஒரு கேள்வி
நினைவிலின்றி
கடந்து போகும் இவ்விழாவை
மறக்கமுடியாததாக்கியிருக்கிறது
இவ்வருடம்.
Comments
Post a Comment