தேவதைகளின் தேவதை
மழை
பொழிந்து கொண்டேயிருக்கிறது
பொழிந்து கொண்டேயிருக்கும்
போலவுமிருக்கிறது
என்னுளிருந்து
இடைவிடாது
எப்பொழுதும்
பொழிகின்ற
உன்நினைவைப்போல!
ஒவ்வொரு துளிக்கும்
மழை
காரணம் வைத்திருக்கும்
நமக்குத் தெரியாது போயினும்
நானும் அவ்வாறே
உன்னோடான ஒவ்வொரு
உரையாடலின் பொழிவும்
நினைவிலிருக்கிறது
காரணத்தோடு
மது ஒருபோதும்
உன்போல
உன் பேச்சுப்போல
உன் நினைவைப் போல
போதைதனைத் தருவதேயில்லை
நீ
என்னை எப்பொழுதும்
அழிக்காது மேம்படுத்தும்
என் வாழ்வுக்கான
நிரந்தர போதை!
எல்லா நேரத்திலும்
முடிவில்லாது நீளும்
உன்னுடனான பேச்சு
மழை நேரத்தில்
பெரும் மயக்கத்தினையும்
தருவது
எனக்கொன்றும் அதிசயமில்லை!
குளிர் சூழ்ந்திருக்கும்
உன் பிரதேசத்திலும்
தினமும் ஒருமுறை
செழித்த
நான் மயங்கும்
உன் கன்னங்களில்
கை வைத்து - நீ
யோசிக்கும் தருணத்தில்
என் சிந்தனை
ஒரு நொடி
உன்னுள் தோன்றி
மறைந்தால்
இப்பிறவி
எனக்கு
மோட்சமடையும்!
என் தேவதைகளின் தேவதையே!

Nice try
ReplyDelete