Posts

Showing posts from January, 2023

இப்படியென்னில் திகழ்ந்திரு

மறுபடி நிகழ்ந்தாய் மழையென பொழிந்தாய் இருவிழி சுடர்ந்தாய் இன்றென் கண்திரள்ந்தாய் அடிவான் மின்னல் நெடுங்கோடாய் நீண்டு நெளிகிறது நடுவான் மட்டும் ஆழ்மன நினைவுகள் அப்படி ஏறி திளைக்கிறது இன்றும் இப்படியென்னில் திகழ்ந்திரு என்றும்!

சாதாரணமல்லவே!

Image
எப்போதும் வருகிற  உன் நினைப்பில் எப்போதாவது பேசிக்கொள்கிற உரையாடலின் பெரும் மெளன இடைவெளியில் இடையிடையே நிகழ்கிற சொற்கள்தான்  நம் பிரியம் சொல்லும் காலப்பலகை நீ உடல்நலிவுற்றிருக்கையில் நானறியாது உன் மீது பிரியம் பெருகுதல் சாதாரணமல்லவே!

ஏன் இவ்வளவு தாமதமானாய்?

Image
  சின்னவயதில்  பக்கத்துவீட்டு சத்யாமேல  ஒரு இது என்றேன்   பள்ளிப்பருவத்தில்  அந்த பெரியகண் பாலாவுக்கு நான் பரம ரசிகனென்றேன்  கருப்பாய் நிமிர்ந்து வளர்ந்த தாயம்மாள்  கல்லூரிக்காலத்தில் என்றேன்  அப்போதைய சினிமா  அறிமுகமான மீனாவும், சிம்ரனும்  இப்பவுந்தான் என்றேன்  பின்பு இரு சத்யாவும் ஒரு சுஜாவும்  ஒரு சரோவும்  பின்புதான் நீயென உளறி முழிக்கையில்   இதெல்லாம் சகஜந்தானே  எனச் சிரிக்கிற  நீ மட்டும்   ஏன் இவ்வளவு தாமதமானாய்?

You are here!

Image
  You are here You are here when I wish You are here when I need You are here always, forever  The beauty is  you also knew that  you are here  You are here to  Replace cold with your warmth  You are here  To replace the void with love You are here  To make me laugh in the dreams You are here  Forever with me As a soulmate  As an eternal being You are always here  inside my heart!

இரவு இன்னும் விடியவேயில்லை

Image
  நீ பேசி நீண்ட நேற்றைய இரவு இன்னும் விடியவேயில்லை.. இந்த பகலிரவில் எனக்கு மட்டும் தெரிகின்ற நட்சத்திரங்களுடே உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. காய்ந்த நிலத்தில் பொழிந்த மழைபோல் நேற்றைய இரவில் நீ! ஈரம் என்றும் மிஞ்சும்.. தூரிகை கொண்டு வரையும் ஓவியன் போல் இரவில் நீ சிரிக்கும் போதெல்லாம் கந்தர்வமாக உன்னை வரைந்து கொண்டேன் நீ வராதே போயின் வாழ்ந்து கொள்ள.. நேற்று நீ பேசி முடிக்கும் வரை நிலவும் நின்றிருந்தது வானில் அதற்கும் காத்திருப்பு அவசியப் படுகிறது என்போல்.. இலேசாகி கனக்கும் இதயமும் பயந்து தெளியும் மனமும் நீ அருளிய வரங்கள் இந்நாட்களில் எனக்கு.. நின் எல்லா காரணங்களையும் புரிந்து கொண்டு ஏற்காத மனம் எனக்கு வரமும் சாபமும்.. நான் இறக்கும் போதாவது உன் எல்லைகளை தகர்த்துவிட்டு இதழில் முத்தமிட வேண்டும் நீ என்னை.. நீ பேசி நீண்ட நேற்றைய இரவு என்றும் விடியப்போவதேயில்லை

வசவுக் கவிதை

Image
இன்றைக்கு இந்த மாலை இன்பம் அளிப்பதாக இருக்கிறது இருக்கட்டும் காரணம் நீ! அறிவாய்.  திட்டுவதன் மூலமும் மகிழ்விக்க முடியுமென உலக பிரியங்களின் வரலாற்றில்,  நமது பிரியங்களின் வரலாற்றில் ஓரு புதிய கண்டுபிடிப்பினை முழு முதலாக நீ அழுத்தமாக பதிவு செய்திருக்கிறாய்.  பிரியந்தோய்ந்த சிறு பிள்ளையின்  இதழ் கணத்தில்  விழுந்த வசவுகளில் பெருமழை பொழிந்த சுடு நிலமாய் மகிழ்ந்தேன்.  அன்பின் எல்லா இலக்கணங்களையும் நம் பிரியங்கொண்டு நாமே உடைப்போமே வரலாறு வணங்க!  இப்போது  உணர்கிறேன் உனது புகைப்படத்தை கட்டமாக  சட்டம் செய்து விட்டம் உயர்ந்த வீட்டில் ஏன் மாற்றினேனென!  ஆத்மாவிற்க்கு அன்றே புரிந்தது அறிவிற்கு புரிய இத்தனை காலம் எத்தனை காலம்!  நீ எனக்கு புத்தருக்கு வாய்த்தது போன்ற போதிமரம் உன்னிலிருந்து பெற்ற  இப்பிரியத்தின் பெரும் ஞானத்தை பேறாகக் கருதி பொற்றி, போற்றி பாதுகாப்பது எனக்கு வரலாற்றுக் கடமை!  எத்துனை காலத்திற்க்குத்தான் ரோமியோ, ஜூலியட் கதைகள்!! நம் சந்ததிகள் நம் கதைகளைப் பேசட்டுமே! உன்னைப் பேசட்டுமே! உன் மெளனத்தின்  ஆழ்பிரியத்தைப் பேசட்...