ஏன் இவ்வளவு தாமதமானாய்?
சின்னவயதில்
பக்கத்துவீட்டு சத்யாமேல
ஒரு இது என்றேன்
பள்ளிப்பருவத்தில்
அந்த பெரியகண் பாலாவுக்கு
நான் பரம ரசிகனென்றேன்
கருப்பாய் நிமிர்ந்து வளர்ந்த
தாயம்மாள்
கல்லூரிக்காலத்தில் என்றேன்
அப்போதைய சினிமா
அறிமுகமான மீனாவும், சிம்ரனும்
இப்பவுந்தான் என்றேன்
பின்பு இரு சத்யாவும்
ஒரு சுஜாவும்
ஒரு சரோவும்
பின்புதான் நீயென
உளறி முழிக்கையில்
இதெல்லாம் சகஜந்தானே
எனச் சிரிக்கிற
நீ மட்டும்
ஏன் இவ்வளவு தாமதமானாய்?
சிரித்தது தான் அத்தனையும் ஆனாள்
ReplyDelete