ஓவிய நினைவு!
ஒரு புள்ளியில்
ஒரு கோட்டில்
தொடங்கும்
ஓவியம் போல்
விழிக்கிறது
உன் நினைவு!
எழுச்சிப்பெற்று
வண்ணங்கள் நிரம்ப
விரிகிறது
நனவாகும்
பெருங்கனவாக!
தூரிகைகள்
தொடுதல்போல்
கடந்து போகும்
தின நிகழ்வுகள்
உன்னை வண்ணங் குழைக்கின்றன!
நீ சிரித்தலும்
நகைத்தலுமாக
கடந்த தருணங்கள்
அடர் நிறங்களாகவும்
மெளனித்த
கணத்த நிமிடங்கள்
வெளிர் நிறமாகவும்
உருப்பெருகையில்
நிஜத்தில்
நீ வருவதாய்
உச்சம் பெற்று
நிறைவடைகிறது
உன்
ஓவியநினைவு!
நட்சத்திரங்கள்
பேசிக் கொண்டிருக்கிற
இந்த நடுநிசியில்.
சிறப்பு!
ReplyDelete