உன்னிடத்தில் கேட்க ஒன்று இருக்கிறது..




எனக்கு 

உன்னிடத்தில் கேட்க 

ஒன்று இருக்கிறது


எனக்கு அவளை

பிடிக்கிறது

ரெம்பவும்.. 

அவள் 

ஆழ் மனஅழகி மட்டுமல்ல

உள்ளும், புறமும்

அத்தனை அறிவவள்

அத்தனை அழகவள்

ஜீவகாருண்ய பேரழகி!


அவள் பேசுவதைக் 

நீ கேட்க வேண்டும்

நீயும் காதல் கொள்வாய்! 

மழலை, மங்கை முதல்

பேரிளம் பெண்ணென

அத்தனையும்

உள்ளடக்கிய அணங்கவள்! 


இன்னொரு 

பிறவியெல்லாம் 

காத்திருக்கும்

பொறுமையில்லையெனக்கு

மறுபிறப்பில்

நம்பிக்கையுமில்லை

அவளை கைவிடுமெண்ணம்

அறவேயில்லை! 


என் கடந்தகாலம்

காட்டி 

அவள் நேசம் மறுப்பின்

ஒரு தலையாக 

அவள் காதலை

நெஞ்சில் சுமந்தே

இப்பிறவிக் கடப்பேன்! 


நேசம் உரைத்தபின்

அவள் பேச மறுத்தால்

முழுதும் தவிர்த்தால்

என் செய்வது?! 


நீதான் கொஞ்சம் 

வழி காட்டேன்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔