சரியாக நினைவிலில்லை. சராசரியாக 1993 வாக்கில் இருக்கும். திருநெல்வேலி, சுத்தமல்லி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (மந்தை ஸ்கூல்) ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாய் நியாபகம். சரஸ்வதி டீச்சர் வகுப்பு ஆசிரியர். எல்லா நிலை மாணவர்களும் பெரிதாக எந்த வித பேதமுமின்றி பயின்ற காலம் அது. அப்பொழுதெல்லாம் விவேகானந்த கேந்திரம் நடத்தும் போட்டிகள் அரசுப் பள்ளிகள் அளவில் பிரபலம். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி , இன்னும் சில போட்டிகள் என வருடா வருடம் நடக்கும். பள்ளியிலிருந்து சில சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்கள். நானும் சென்றிருக்கிறேன். நான் சிறந்த மாணவரா??!! அப்படித்தான் நினைக்கிறேன்… ஆனால் பரிசெல்லாம் நமக்கு ரெம்பத் தூரம். போவது வருவதோடு சரி. ஒரு புளி சாதம் கட்டிக்கொண்டு ஜாலியாக போய் வருவதோடு சரி. தூரமாக சங்கர் அறிமுகமானது அங்கிருந்துதான். எல்லா வருடங்களிலும், நிறைய போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வருகிற ஒரு பிரைட் ஸ்டுடென்ட் . ஆளும் பிரைட் , அறிவும் பிரைட். அவனது ஆளுமை (personality ) பற்றியும் சொல்ல வேண்டும். மொத்தப் பள்ளி...