ஒரு காதல் கடிதம் :- வாகனங்கள் காற்றை கிழித்துக் கொண்டு கிழக்கும் மேற்கும் பயணிக்கின்ற சாலையில் ஒரு மாலைப்பொழுதில் உன்னை முதலில் பார்த்த நியாபகம் நேற்று நடந்தது போல் இன்றும் நினைவிலிருக்கிறது. அன்று கதகதத்த மாலைசூரியனைப் போல் உன் கண்கள் என் நோக்கி பலபலத்ததையும், வீசிய காற்றில் கலைந்த உனது சிகைபோல் எனக்குள் ஏதோ ஒழுங்காயிருந்தது கலைந்தமையையும் இன்று உணருகையில் புலப்படுகிறது . ஹார்மோன்களின் கலகத்தால் ஏற்படும் உடற்செயலியல் வினைதான் இதுவெனினும், உன்னை முதலில் பார்த்த நொடியில் எனக்குள் இத்தகைய வினைகள், விபரீதங்கள் ஏற்பட எந்த அறிவியல், சுரப்புகளின் விதி காரணம் என்பது பலமுறை பலதேடல்களிலும் எனக்கும், இன்றுவரை அறிவியலுக்கும் புலப்படவில்லை. அது ஏதோ ஈர்ப்பு என்ற நினைப்பு கூட எனக்கில்லை அந்தநாள்தனின் அந்திமப் பொழுதுகளில். இருள் சூழத்தொடங்கிய அந்த கருக்கள் பொழுதில் வெவ்வேறு திசைகளில் இருவரும் அவரவர் இலக்கு நோக்கி பயணப்பட்டோம், நீ எனக்குள் ஒரு பிரயாணத்தை, ஒரு மாயைப் பயணத்தை தொடங்கியிருப்பது அறியாது நான் உறங்கியவாரே சென்றுகொண்டிரு...
Comments
Post a Comment