ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔
வார இறுதி நாட்களில்
உன் நினைவைத் தாங்கி
சில மணிநேரம்
தனித்திருக்கிறேன்
இதர நாட்களில்
சில நிமிடங்கள்
பெருகும் கண்ணீரை
கனக்கும் இதயத்தை
என்ன சொல்லி
தேற்றுவதெனத்
தெரியவில்லை
இதயத்திற்கு
இத்தனையருகில் - ஒரு
இழப்பை
துயரத்தினை
வலியை
நான் சந்தித்ததேயில்லை
நிறைய
நல் நினைவுகளை
தந்த நீ
இதையும் தந்து
போயிருக்கிறாய்
உனது அருகாமை
இதயத்தினை
இலேசாக்கும் எப்போதும்
முதன் முறை
உனது இல்லாமை
கணமாக்கியிருக்கிறது
ஒளிரும்
உனது கண்களை
நெருப்புக்கு
தின்னக் கொடுத்துவிட்டு
இருளில்
அலைகிற, அழுகிற
சாபம் எனக்கு
உனக்கென்ன
ஒரே தினத்தில்
கடந்து போய்விட்டாய்
எனக்கு
ஒரு யுகமாகுமே
என்ன செய்ய! 😔
நீ படும் வேதனை தான் எனக்கும்
ReplyDeleteஇளைய பருவம் நண்பனின் நட்பில் அழகானது. கல்லூரி வாழ்க்கை அதை விட அழகாக்கியது உனது நட்பு. கல்வியில் சிறந்த உன்னை எந்நாளும் ஒரு குருவாகவே நினைத்தேன். கெமிட்ஸ்ட்ரி லேப்பில் டைட்ரேஷன் செய்கையில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் சோதனையில் கூட உன்னிடம் கேட்டுத் கேட்டு செய்வேனே. மாலை நேரம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு மிதிவண்டியில் செல்லும்போது பல கதைகள் பேசி சிலாகிப்போமே. அந்நாள் இனி வாராதா