எல்லாவற்றுக்கும் நீதான்!
இரண்டொரு நாட்களாக
கதைக்க நேரமின்றி
சொற்களின் கனத்தை
சுமந்துகொண்டே அழைகிறேன்
பல தினங்களாக
பகிர்ந்த கவிதைகளை
நீ இன்னும் படிக்கவுமில்லை
பார்க்கவுமில்லை
அம்மா வந்து போனது
அலுவலக அங்கலாய்ப்புகள்
பத்திரிக்கைகளில் படித்தது
படம் இரண்டு பார்த்தது
அக்கம்பக்க நிகழ்வுகள்
அந்தரங்க புலம்பல்கள்
என நிகழ்வுகள்
நிரம்பி முட்டுகையில்
நேரமின்றி இருக்கிறாய்
சிந்தை வெடிப்பதற்குள்
சீக்கிரம் செவிமடு
ஏனெனில்
என் எல்லாவற்றுக்கும்
காதுகளை
காதலோடு
கொடுப்பவள் நீதான்.
Comments
Post a Comment