Posts

Showing posts from March, 2024

காத்துக்கொண்டேயிருப்பேன்!

Image
சற்றே பனிசூழ்ந்திருக்கும்  காலைப்பொழுதில்  கதிராக ஊடுருவும்  உனது நினைப்பில்  மகிழ்ந்திருக்கிறேன்! இப்பொழுதெல்லாம்  அடிக்கடி  கண்கள் பனிக்கின்றன  மனது இலகுவாக  இருக்கிறது  அன்பின் அதீதம்  என்னை புரட்டிப் போடுதலை  உணரமுடிகிறது  நேற்று  நீ உதிர்த்த  அந்த வரலாற்றுச் சொற்றொடரை  வரிகளாய்  வார்த்தைகளாய்  பிரித்து கோர்த்து  விளையாடும் குழந்தையாய்  மனதை மாற்றி விட்டிருக்கிறாய்! எனக்கே தெரியாத  என் ஆழ்மன உணர்வுகளை  வீணையின்  நரம்புகளாய்  மீட்டி இசையாக்குகிறாய்  எப்பொழுதும்! நீதான் வேண்டுமென  அடிக்கடி  அழுகின்ற  அடம் பிடிக்கிற - இந்த  ஆழ்மனக் குழந்தையை   உன்னிடம் சேர்ப்பிக்க  காலம்  கூடவே கூடாது போலும்! நீ  விரைவில்  வருவதாய்  சொல்லியிருக்கிறாய்  நாட்களை  எண்ணத் தொடங்கிவிட்டேன்! காலம்  இனி  மின்னல்வேகத்தில்  என் மனதோடு  இயைந்து ஓடும்! இதயம் படபடக்கத்  தொடங்கியிருக்கிறது  அதை ஆசுவாசப்பட...

எனது மோனலிசா!

Image
இந்த முகம் எனது கவிதைகளுக்கான  நதிமூலம் பரந்த  சிவந்த நெற்றி  நான் கண்களால்  கவிதை எழுதிப் பழக  ஏற்ற இடம்!   எனக்கான எல்லா உணர்வுகளின் மொத்த அகராதியும்  அந்தக் கண்கள்! இரு புருவங்கள் - என்  எல்லா பருவங்களின் தொகுப்பு! இரு கன்னங்களில்  எல்லா மொழிகளும் எல்லா வார்த்தைகளும்  எழிலாய் அடக்கம்! நாசி  கூர்ந்து நோக்கின் ஒருமுகப்படுத்தும்  காதல் தியானத்தின்  உச்சி! இதழ்கள்  என்னவென்று சொல்ல! இலக்கண குவியலென அச்சிறு நாடி! உனது இந்த முகம் என்னுள்  ஆழப்பதிந்து கைப்பிடித்து  என்னை கவிதை எழுதவைக்கும் எனது மோனலிசா! 

நீ இன்றும் என்னவளன்றோ!

Image
சற்றே பிந்திய  தூரதிருஷ்டசாலி நான்!   ஆழ்மனக்  கேவலை  உணர மறந்த அறிவிலி நான்!  கண்கள் பேசும்  கவிதையை  வாசிக்க மறந்த  குருடன் நான்!  ஆத்மாக்களின்  அன்பின் மொழியை  கேட்க மறந்த  செவிடன் நான்! கைவந்த நிலவை  தவறவிட்டு விட்டு  தினம் வானம் பார்த்து  வருத்தத்தில்  கவிதை எழுதும்  கவிஞன் நான்!  நீ முதன் முதலாய்  வந்து போகையில்   ஆற்றல் இழந்த  இதயத்தின் வலியை  அன்றே உணர்ந்திருப்பின்  நீ இன்றும் என்னவளன்றோ!

நீ வாழிய..

Image
இப்போதெல்லாம்  வார்த்தைகளுக்கு  வரிகளுக்கு  பஞ்சமாயிருக்கிறது..  கடவுளின் நாட்டில் கட்டிலில் அமர்ந்தவாறே விரிந்து கிடக்கும்  இந்நகரத்தை நோக்கிக் கொண்டிருக்கிறேன்  வெகு நேரமாக என் எல்லா  மன உணர்வுகளையும் பேச்சிலோ எழுத்திலோ  அடக்கி விட முடிவதில்லை நிரம்பித் தழும்பும் நீர்தான் நீ காண்பது நீ கேட்பது நீ வாசிப்பது முற்றுமல்ல கழிந்த இரவிலும் கனவில் நீ வந்தாய் நனவில் நிகழா நல்லதனைத்தையும் நிகழ்த்திப் போகிறாய் தினமும் நான் நானா இல்லை நீயா என சந்தேகிக்கும் அளவிற்க்கு  உனைத் தாங்கிக் திரிகிறேன் வாழ்வு  உனக்காக உன்னால் மலர்ந்திருக்கிறது மகிழ்ந்திருக்கிறது அகமும்  புறமும்  என்னுள் விருட்சமாயிருக்கும்  நீ வாழிய..