நீ வாழிய..
இப்போதெல்லாம்
வார்த்தைகளுக்கு
வரிகளுக்கு
பஞ்சமாயிருக்கிறது..
கடவுளின் நாட்டில்
கட்டிலில் அமர்ந்தவாறே
விரிந்து கிடக்கும்
இந்நகரத்தை நோக்கிக் கொண்டிருக்கிறேன்
வெகு நேரமாக
என் எல்லா
மன உணர்வுகளையும்
பேச்சிலோ
எழுத்திலோ
அடக்கி விட முடிவதில்லை
நிரம்பித் தழும்பும்
நீர்தான்
நீ காண்பது
நீ கேட்பது
நீ வாசிப்பது
முற்றுமல்ல
கழிந்த இரவிலும்
கனவில் நீ வந்தாய்
நனவில் நிகழா
நல்லதனைத்தையும்
நிகழ்த்திப் போகிறாய்
தினமும்
நான் நானா
இல்லை நீயா
என சந்தேகிக்கும்
அளவிற்க்கு
உனைத் தாங்கிக் திரிகிறேன்
வாழ்வு
உனக்காக
உன்னால்
மலர்ந்திருக்கிறது
மகிழ்ந்திருக்கிறது
அகமும்
புறமும்
என்னுள் விருட்சமாயிருக்கும்
நீ வாழிய..
Comments
Post a Comment