எனது மோனலிசா!
இந்த முகம்
எனது கவிதைகளுக்கான
நதிமூலம்
பரந்த
சிவந்த நெற்றி
நான் கண்களால்
கவிதை எழுதிப் பழக
ஏற்ற இடம்!
எனக்கான
எல்லா உணர்வுகளின்
மொத்த அகராதியும்
அந்தக் கண்கள்!
இரு புருவங்கள் - என்
எல்லா பருவங்களின்
தொகுப்பு!
இரு கன்னங்களில்
எல்லா மொழிகளும்
எல்லா வார்த்தைகளும்
எழிலாய் அடக்கம்!
நாசி
கூர்ந்து நோக்கின்
ஒருமுகப்படுத்தும்
காதல் தியானத்தின்
உச்சி!
இதழ்கள்
என்னவென்று சொல்ல!
இலக்கண குவியலென
அச்சிறு நாடி!
உனது இந்த முகம்
என்னுள்
ஆழப்பதிந்து
கைப்பிடித்து
என்னை கவிதை எழுதவைக்கும்
எனது மோனலிசா!
Comments
Post a Comment