நீ இன்றும் என்னவளன்றோ!



சற்றே பிந்திய 

தூரதிருஷ்டசாலி நான்!  


ஆழ்மனக்  கேவலை 

உணர மறந்த

அறிவிலி நான்! 


கண்கள் பேசும் 

கவிதையை 

வாசிக்க மறந்த 

குருடன் நான்! 


ஆத்மாக்களின் 

அன்பின் மொழியை 

கேட்க மறந்த 

செவிடன் நான்!


கைவந்த நிலவை 

தவறவிட்டு விட்டு 

தினம் வானம் பார்த்து 

வருத்தத்தில் 

கவிதை எழுதும் 

கவிஞன் நான்! 


நீ முதன் முதலாய் 

வந்து போகையில்  

ஆற்றல் இழந்த 

இதயத்தின் வலியை 

அன்றே உணர்ந்திருப்பின் 


நீ இன்றும் என்னவளன்றோ!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔